41 வருஷம் கழிச்சு ஏலம் போன ஒரு துண்டு 'Cake'.. "சார்லஸ் - டயானா கல்யாணத்துல செஞ்சதாம்"!!.. சுவாரஸ்ய பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டன் ராணியாக சுமார் 70 ஆண்டுகள் வலம் வந்த ராணி எலிசபெத், கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று தனது 96 ஆவது வயதில் உடல்நல குறைவால் காலமானார்.

41 வருஷம் கழிச்சு ஏலம் போன ஒரு துண்டு 'Cake'.. "சார்லஸ் - டயானா கல்யாணத்துல செஞ்சதாம்"!!.. சுவாரஸ்ய பின்னணி!!

இதனைத் தொடர்ந்து, அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ராஜ மரியாதையுடன் செப்டம்பர் 19 ஆம் தேதியன்று உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.

Also Read | Video : சூர்யகுமாரை பங்கமா கலாய்ச்ச ரோஹித்.. "அதுலயும் ஒரு போஸ் கொடுத்தாரு பாருங்க"!!

தொடர்ந்து, தற்போது ராணி எலிசபெத் மகனான சார்லஸ், பிரிட்டனின் மன்னராக செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில், பிரிட்டன் மன்னரான சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா ஆகியோரின் திருமணத்தின் போது தயார் செய்யப்பட்ட கேக் ஒன்றின் ஒரு பகுதி, தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சார்லஸ் மற்றும் டயானா ஆகியோரின் திருமணம், கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில் சுமார் 3,000 பேருக்கு அதிகமான விருந்தினர்களும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

charles and diana wedding cake slice auction sold after 41 years

இந்த திருமணத்தில் விருந்தினராக நைஜல் ரிக்கட்ஸ் என்ற நபர் ஒருவரும் கலந்து கொண்டிருந்தார். மேலும், சார்லஸ் - டயானா திருமணத்தின் போது மொத்தம் 23 கேக்குகள் தயார் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இதில், ஐந்து அடுக்குகள் மற்றும் ஐந்து அடி கொண்ட கேக் ஒன்றும் இடம்பெற்றிருந்தது. அந்த கேக்கின் ஒரு பகுதியை நைஜல் ரிக்கட்ஸ் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, கடந்த ஆண்டு நைஜல் ரிக்கட்ஸும் உயிரிழந்தார். ஆனால், 41 ஆண்டுகளுக்கு முன்பு சார்லஸ் - டயானா திருமணத்தின் போது தயார் செய்யப்பட்ட கேக்கின் ஒரு பகுதியை இத்தனை ஆண்டுகள் பாத்திரமாகவும் நைஜல் ரிக்கட்ஸ் வைத்திருந்துள்ளார்.

charles and diana wedding cake slice auction sold after 41 years

இந்த நிலையில், அந்த கேக் துண்டை இங்கிலாந்தில் உள்ள ஏல நிறுவனம் தற்போது ஏலத்தில் விட போவதாகவும் அறிவித்திருந்தது. மேலும், இந்திய மதிப்பில் சுமார் 27,000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இந்த நிலையில், இந்த கேக் துண்டு தற்போது இந்திய மதிப்பில் சுமார் 15,000 ரூபாய்க்கு தான் ஏலம் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைந்த விலைக்கு இந்த கேக் துண்டு விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கு முன்பாக, கடந்த 2014 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளிலும், சார்லஸ் - டயானா திருமணத்தில் தயார் செய்யப்பட்ட கேக்குகளின் துண்டு ஏலம் விடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

Also Read | புதுப் பொண்டாட்டி கூடவும் சண்டை.. பரிதாபமாக வெளியேறிய கோபி.! ஹனிமூன் போன மனுசனுக்கு இப்படி ஒரு நிலைமையா!

WEDDING, WEDDING CAKE, WEDDING CAKE SLICE AUCTION, CHARLES AND DIANA WEDDING CAKE

மற்ற செய்திகள்