ஊழியர்களை பணிநீக்கம் செஞ்சுதுக்காக.. கண்ணீருடன் செல்ஃபி போட்டு வைரலான 'CEO'.. ஒரே வாரத்துல நடந்த செம 'ட்விஸ்ட்'!!
முகப்பு > செய்திகள் > உலகம்தன்னுடைய நிறுவனத்தில் உள்ள சில ஊழியர்களை பணிநீக்கம் செய்ததன் பெயரில், அழுத முகத்துடன் நிறுவனத்தின் CEO, கடந்த வாரம் வைரலாகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு விஷயத்துக்காக அவர் வைரலாகி வருகிறார்.
அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்றின் சிஇஓவாக பணியாற்றி வருபவர் பிராடன் வாலேக். இவர் தனது நிறுவனத்தின் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டதாக பதிவு ஒன்றை தனது LinkedIn பக்கத்தில் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.
அது மட்டுமில்லாமல், ஊழியர்களை பணிநீக்கம் செய்ததற்கான காரணத்தையும் அவர் அந்த பதிவில் பட்டியலிட்டு அழுதபடி இருக்கும் தனது செல்ஃபி ஒன்றையும் பகிர்ந்திருந்தார் வாலேக்.
தங்களது நிறுவனத்தின் முதன்மை இலக்கை நோக்கி நகராமல், வேறு ஒரு இலக்கை நோக்கி குழுவை தான் செலுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட விளைவுகளின் காரணமாக பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியதாகவும் வாலேக் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், தன்னுடைய ஒவ்வொரு பணியாளர்களை பற்றியும் தனக்கு தெரியும் என்றும் அவர்களுடைய மகிழ்ச்சியான மற்றும் கவலை நிறைந்த பக்கங்களை தான் அறிந்திருந்ததாகவும் வாலேக் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிறகு, கண்ணீருடன் புகைப்படம் ஒன்றையும், மேலும் அதற்கான காரணத்தையும் பிராடன் வாலேக் குறிப்பிட்டிருந்தது, இணையத்தில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துகளையும் வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது பிராடன் மீண்டும் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று, இணையத்தில் அவரது பெயரை திரும்பவும் வைரலாக்க தொடங்கி உள்ளது. தான் பணிநீக்கம் செய்த ஊழியர்களில் ஒருவரான Noah Smith என்பவருக்கு, நிறைய இடங்களில் வேலை வாய்ப்பு வரும் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பிராடன் பகிர்ந்துள்ளார்.
மேலும் தனது கேப்ஷனில், "வைரலாக மாற வேண்டும் என்ற நோக்கில் அழுத செல்ஃபியை பதிவேற்றவில்லை. ஆனால், ஸ்மித்துக்கு வேலை வாய்ப்புகள் வருவதை பார்க்கும் போது, ஒவ்வொரு மோசமான கமெண்ட்டும் மதிப்பிற்குரியதாகிறது. வேலை வாய்ப்புகளை கொண்டு ஸ்மித்தின் இன்பாக்ஸை நிரப்பி உள்ளீர்கள். உங்கள் அனைவரின் காரணமாக, ஸ்மித்துக்கு தற்போது ஏராளமான வாய்ப்புகள் உருவாகி உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமில்லாமல், அதிகம் கருத்துக்களை சம்பாதித்த தனது கண்ணீர் செல்பியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததற்கான காரணத்தையும் அவர் விளக்கி உள்ளார். அது வைரலாகும் என்று தெரிந்தோ, எனக்காக பரிதாபப்பட வேண்டும் என்றோ அந்த செல்பியை பகிரவில்லை என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிநீக்கம் காரணமாக, பலரது வாழ்க்கை கடினமாக இருந்ததை நினைத்த போது, வந்த கண்ணீரை அப்படியே பதிவிட்டு இதை பற்றி சொல்ல வேண்டும் என்று தான் அப்படி பகிர்ந்தேன் என்றும் பிராடன் கூறி உள்ளார்.
தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்து அழுது கொண்டே பதிவிட்ட சிஇஓவால், அவர் நீக்கிய ஊழியருக்கு வேலை வாய்ப்பு வந்து கொட்டியுள்ளது, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்