'தடுப்பூசி போடுறீங்களா இல்ல'... 'அடுக்கடுக்காக காத்திருக்கும் நடவடிக்கைகள்'... பாகிஸ்தான் அரசு அதிரடி!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் இதுவரையில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.23 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 18.18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42.89 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.61 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 95 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இதற்கிடையே பாகிஸ்தானில் தடுப்பூசி போடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. அங்குக் கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு, முகாம்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லை என்று பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிப்பு, அலுவலகம் வர அனுமதி மறுப்பு, சம்பளம் கிடையாது, ஓட்டல்கள்-வணிக வளாகங்களில் நுழைய அனுமதி ரத்து என அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மற்ற செய்திகள்