VIDEO: ‘97 பேரை பலி வாங்கிய கோரவிபத்து’!.. தரையிறங்கும் முன் தடுமாறிய விமானம்.. நெஞ்சை பதறவைத்த இறுதி நிமிடங்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தானில் நடந்த விமான விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

VIDEO: ‘97 பேரை பலி வாங்கிய கோரவிபத்து’!.. தரையிறங்கும் முன் தடுமாறிய விமானம்.. நெஞ்சை பதறவைத்த இறுதி நிமிடங்கள்..!

பாகிஸ்தானில் ஊரடங்கு காரணமாக விமானம், ரயில் மற்றும் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைக்கு மட்டும் அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. இதனை அடுத்து அரசு சொந்தமான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்ஸின் ஏர்பஸ் ரக பயணிகள் விமானம் நேற்று லாகூரில் இருந்து கராச்சிக்கு புறப்பட்டது.

இந்த விமானத்தில் 99 பணிகளும், 8 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர். கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க இருந்தது. அப்போது திடீரென தடுமாறிய விமானம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விமானம் தடுமாறி குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்