உள்ளே நுழைஞ்சவங்க தப்பிக்கிறது ரொம்ப கஷ்டம்.. "இதுக்கெல்லாம் காரணம் அந்த பொம்பள தான்"..1000 வருஷமா ஊர் மக்களை துரத்தும் சாபம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் 1000 வருடங்களாக ஒரு குகை பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. சமீபத்தில் இதில் மறைந்துள்ள உண்மைகளை கண்டறிய சென்ற குழு சொன்ன விஷயங்கள் மக்களை மேலும் அதிர வைத்துள்ளது.
மர்ம குகை
இங்கிலாந்தின் சோமர்செட்டில் உள்ள வெல்ஸ் அருகே அமைந்துள்ளது வூக்கி குகைகள். இதனுள் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக பெண் ஒருவர் வசித்து வந்ததாகவும் அவர் கொடுத்த சாபத்தால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாகவும் நம்புகிறார்கள் உள்ளூர் மக்கள். இதுபற்றி மக்களிடையே பல்வேறு கதைகள் பரப்பப்பட்டிருக்கின்றன. அவற்றில் எது உண்மை, எது பொய் என்பது யாருக்கும் தெரியாது. அவற்றில் பிரபலமானது இந்த குகையின் உள்ளே நுழைந்தவர்கள் எளிதில் வெளியே வர முடியாது என்பதாகும்.
இப்படி 1000 ஆண்டுகளாக தொடரும் மர்மம் பற்றி அறிந்துகொள்ள சமீபத்தில் நான்கு பேர் குகைக்குள்ளே சென்றிருக்கிறார்கள். டோனி (37), அவரது மனைவி பெவ் (59) மற்றும் Ghost2Ghost அமைப்பின் புலனாய்வாளர்கள் டெப்பி (51), எமிலி கோவல் (38) ஆகிய நான்கு பேரும் குகைக்குள் புதைந்திருக்கும் மர்மங்களை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். ஆனால், நடந்ததே வேறு.
சத்தம்
சுற்றுலா வழிகாட்டி ஜேமி ரஸ்ஸல் தலைமையில் இரவில் குகைகளுக்குள் நுழைந்த குழுவினர் கொஞ்ச நேரத்தில் வித்தியாசமான சத்தத்தை கேட்டிருக்கின்றனர். மேலும், அந்த சத்தம் பெண் ஒருவரின் குரல் போலவே இருந்ததாகவும், அது தங்களை நடுங்கச் செய்ததாகவும் கூறுகின்றனர் இந்த சாகச குழுவை சேர்ந்தவர்கள். இதுபற்றி பேசிய டோனி,"அது நிச்சயம் ஒரு பெண்ணின் குரல் தான். அது எங்களை பிரிக்க பார்த்தது. இருப்பினும் நாங்கள் எங்களது கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டோம். திடீரென 'அவளை கொல்லுங்கள்' என குரல் கேட்டது. அப்போது எங்கள் கால்கள் நடுங்கத் துவங்கின" என்றார்.
நேரம் செல்லச்செல்ல, உள்ளே சூழ்நிலை இருக்கமானதாகவும், பயங்கரமானதாகவும் மாறியதாக கூறும் இவர்கள், திரும்பி போய்விடலாமா என பலமுறை யோசித்ததாக தெரிவித்திருக்கின்றனர். இதுபற்றி பேசிய டோனி,"நாங்கள் மது அருந்தியவர்களை போல நடந்துகொள்ள ஆரம்பித்தோம். அந்த சத்தம் எங்களை பலவீனமாக்கியது. எங்களது உடல்நிலை மோசமடைந்ததை போல உணர்ந்தோம். நாங்கள் வெளியேறுவதை தவிர்த்து எங்களுக்கு வேறு வழி இல்லை எனத் தெரிந்ததும், நாங்கள் குகையைவிட்டு வேகமாக வெளியேறிவிட்டோம்" என்றார்.
சாபம்
இதுபற்றி உள்ளூர் மக்கள் பேசுகையில்," அந்த குகையில் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பெண் வாழ்ந்தார். அவர் குகைக்குள்ளே வித்தியாசமான வழிபாட்டையும் பூஜையும் செய்துவந்தார். எப்போதும் குகையில் இருந்து அச்சமூட்டும் வகையில் சத்தம் வந்துகொண்டே இருக்கும். அந்த பெண் அளித்த சாபத்தினால் விளைச்சல் குறைந்து, மக்கள் ஒவ்வொருவராக காணாமல் போயினர். வீட்டு விலங்குகளும் மர்மமான முறையில் மரணமடைந்தன. இதனை இந்த பகுதியின் முன்னோர்கள் எங்களுக்கு சொன்னார்கள். அதனால் நாங்கள் அந்த குகைக்கு செல்வதே இல்லை" என்கின்றனர்.
1000 வருடமாக நீடிக்கும் இந்த மர்மத்திற்கு பின்னால், என்ன இருக்கிறது என்பது இன்னும் விடுவிக்க முடியாத புதிராகவே இருக்கிறது.
மற்ற செய்திகள்