'இதுக்கு ஒரு எண்டு கிடையாதா'?...'புதிய பீதியை கிளப்பும் சீன ஆய்வாளர்கள்'...அதிரவைக்கும் ஆய்வு!
முகப்பு > செய்திகள் > உலகம்மனிதர்களுக்கு மட்டுமின்றி பூனைகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்று சீன ஆய்வில் வெளிவந்துள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளில் உயிரிழப்பு என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புலியை பராமரித்து வந்தவர் மூலமாக, புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான ஆராய்ச்சியில் சீனா இறங்கியது. நாய், பூனை, கோழி, வாத்து, பன்றி ஆகிய உயிரினங்களுக்கு, கொரோனா வைரசுகளை செறிவூட்டி ஊசி மூலம் அவற்றை செலுத்தி சோதனை செய்யப்பட்டது. பின்னர் அந்த விலங்குகளை சோதனை செய்தபோது பூனைக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே பூனையிடம் இருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா? என்பது இன்னும் உறுதி படுத்தப்படவில்லை. ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆய்வுகளை உலக சுகாதர நிறுவனம் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது.