Tiruchitrambalam Mobile Logo Top
Viruman Mobiile Logo top

அதிகாலையில்.. கூச்சலிட்டு எழுப்பிய 'பூனை'.. கண் திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக, பலரும் தங்களின் வீட்டில் செல்ல பிராணிகளாக நாய்கள், பூனைகள் உள்ளிட்டவற்றை வளர்த்து வருவார்கள்.

அதிகாலையில்.. கூச்சலிட்டு எழுப்பிய 'பூனை'.. கண் திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!

Also Read | ஒரே ஒரு Airpod-க்காக.. 7,000 கி.மீ தூரம் பறந்த இளைஞர்.. "செலவு மட்டும் 2 லட்சத்துக்கும் மேலயாம்.." காரணம் அறிந்து மிரண்டு போன நெட்டிசன்கள்

அந்த வகையில், Nottinghamshire என்னும் பகுதியில் பூனை மூலம் நடந்த சம்பவம் ஒன்று, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Nottinghamshire பகுதியை அடுத்த Stapleford என்னும் இடத்தை சேர்ந்தவர் Sam Felstead. 42 வயதாகும் இவர், சமீபத்தில் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அதிகாலையில் நடந்த சம்பவம் ஒன்று கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாம் அசந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலை சுமார் நான்கரை மணியளவில், அவரது பூனையான பில்லி, உரிமையாளரான சாமின் மீது அமர்ந்து மியாவ் மியாவ் என கத்திய படி, அவரை எழுப்ப முயற்சித்ததாக கூறப்படுகிறது. தன் மீது அமர்ந்து கத்தி கொண்டிருந்த பூனையின் சத்தத்தை கேட்டதும், திடீரென விழித்து கொண்டார் சாம்.

cat saves owner life who suffered with heart attack

அப்போது தான், தனது உடலில் பயங்கரமான வலி ஒன்று இருப்பதையும் தன்னால் எழுந்திருக்க முடியவில்லை என்பதையும் சாம் உணர்ந்து கொண்டார். உடனடியாக, தனது தாயை அழைத்துள்ளார் சாம். இதனைத் தொடர்ந்து, நெஞ்சு வலியால் அவதிப்பட்ட சாமை அங்கிருந்து மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றிலும் அவரது தாயார் சேர்த்துள்ளார். அப்போது, டாக்டர் சொன்ன தகவலைக் கேட்டு, சாமின் தாயார் ஒரு நிமிடம் அதிர்ந்தே போய்விட்டார்.

அதாவது அதிகாலை வேளையில் ஒரு சிறிய மாரடைப்பு சாமுக்கு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். வருவதற்கு தாமதமாகி இருந்தால் கூட, ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறி உள்ளனர். அப்படி ஒரு வேளையில் தான், தனது உரிமையாளரை பூனை எழுப்பியதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.

cat saves owner life who suffered with heart attack

இந்த சம்பவம் குறித்து பின்னர் பேசிய சாம், "அதிகாலையில் எனது உடலில் மீது ஏறி இருந்த பில்லி, மியாவ் மியாவ் என கத்தியது, எனது காதில் பயங்கரமாக ஒலித்தது. இதற்கு முன்பு தூங்கிக் கொண்டிருக்கும் என்னிடம் ஒருமுறை கூட பில்லி இப்படி செய்ததில்லை. அப்படி இருக்கும் நிலையில், அன்றைய தினம், அதிகாலையில் என்னை பூனை எழுப்பியதை மிகவும் மகிழ்ச்சியாகவே நான் கருதுகிறேன். ஒருவேளை பில்லி என்னை எழுப்பாமல் போயிருந்தால், நிச்சயம் என்னை அது ஒரு மோசமான நிலைமைக்கு கொண்டு சேர்த்திருக்கும்" என சாம் கூறி உள்ளார்.

cat saves owner life who suffered with heart attack

பொதுவாக, சாமின் தாயாரிடம் தான் பில்லி என்ற பூனை அதிக நேரத்தை செலவிட்டு வரும். ஆனால், அன்றைய தினத்தில், தன்னிடம் இருந்ததையும் சாம் நெகிழ்ந்து போய் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி பேசும் பூனையின் நடத்தை நிபுணர்கள், அவரது உரிமையாளாரான சாமின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டதை உணர்ந்து, கவலையில் பூனை அப்படி செய்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பூனை காரணமாக, மாரடைப்பு ஏற்பட்ட பெண் சரியான நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம், பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.

Also Read | "ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்".. இ ரிக்ஷா ஓட்டும் மாற்றுத்திறனாளி.. பின்னணி கேட்டு மனம் உடையும் நெட்டிசன்கள்

CAT, CAT SAVES OWNER LIFE, HEART ATTACK

மற்ற செய்திகள்