VIDEO: “வீடியோ கான்பிரசன்சிங்கில் சேட்டைக்கார பூனை பார்த்த வேலை!”.. டென்சனாகி எம்.பி. கூறியது இதுதான்.. ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லண்டன் பாராளுமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசிய ஸ்காட்டி எம்.பி ஜான் நிக்கல்சன் பேசும்போது பூனையொன்று குறுக்கே வந்து வாலாட்டி சேட்டை செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

VIDEO: “வீடியோ கான்பிரசன்சிங்கில் சேட்டைக்கார பூனை பார்த்த வேலை!”.. டென்சனாகி எம்.பி. கூறியது இதுதான்.. ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன வீடியோ!

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வொர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறைகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இதில் பல சுவாரசியமான சம்பவங்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில் லண்டன் பாராளுமன்ற குழுவின் டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு துறைகளின் செயல்பாடுகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எம்பி ஜான் நிக்கல்சன் வீடியோ கான்ப்ரன்சிங்கில் பேசிக்கொண்டிருந்தார்.

அவருடைய ரஜே என்கிற பூனை அவர் பேசும்பொழுது கேமராவுக்கு குறுக்கே வந்து நின்று உட்கார்ந்துகொண்டு வாலாட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது. பூனையின் வால் கேமராவை மறைத்ததால் கமிட்டி உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்ட நிக்கல்சன் மீண்டும் தன்னுடைய உரையை தொடங்கினார். மீண்டும் பூனை தன் வாலை கேமராவின் முன்பு ஆட்டியபடி குறுக்கிடவே, நிக்கல்சன், “ரஜே தயவுசெய்து உன் வாலை கீழே போடு” என்று பூனையிடம் எடுத்துரைத்தார். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த முகம் காட்டாத பூனையின்

வால் ஒரே நாளில் உலகமெல்லாம் பிரபலமாகிவிட்டது.

 

மற்ற செய்திகள்