நேத்துவரை கார் கிளீனர்.. ஆனா இப்போ கோடீஸ்வரர்.. ஒரே இரவில் மாறிய வாழ்க்கை.. Check-அ வாங்கிட்டு மனுஷன் ஒன்னு சொன்னாரு பாருங்க..!
முகப்பு > செய்திகள் > உலகம்துபாயில் கார் கிளீனராக பணிபுரிந்து வந்த நபர் ஒருவருக்கு லாட்டரி மூலமாக ஜாக்பாட் அடித்திருக்கிறது. இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு டிரா எனப்படும் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த மஹ்சூஸ். இதில் பங்கேற்பவர்கள் தங்களுக்கு விருப்பமான 5 எண்களை உள்ளீடு செய்யவேண்டும். குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் 5 எண்களில் எத்தனை எண்கள் ஒத்துபோகிறதோ அதற்கு தகுந்தபடி பரிசானது கிடைக்கும். அதன்படி, துபாயில் கார் கிளீனராக பணிபுரிந்து வரும் பாரத் என்பவர் 16, 27, 31, 37, 42 என்ற எண்களை உள்ளீடு செய்திருக்கிறார்.
அதிர்ஷ்டம்
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 94 வது டிராவில் பாரத் -ற்கு 10 மில்லியன் அமீரக திர்ஹம்ஸ் தொகை பரிசாக கிடைத்திருக்கிறது. நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட பாரத் இந்த செய்தியை அறிந்து ஆனந்தத்தில் துள்ளிக் குதித்திருக்கிறார். 31 வயதாகும் பாரத் தற்போது மாதம் 1300 திர்ஹம்ஸ் தொகையை ஊதியமாக பெற்றுவருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தன்னுடைய பெயரில் வங்கிக் கணக்கு கூட இல்லை எனவும் இந்த வெற்றி தனது வாழ்க்கையையே மாற்றப்போவதாகவும் பாரத் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
மகிழ்ச்சி
இதுபற்றி அவர் பேசுகையில், "இந்த பரிசு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இது என்னைச்சுற்றி உள்ள பலரது வாழ்க்கையை மாற்றப்போகிறது. இந்த தொகையை கொண்டு என்னுடைய கடன்களை அடைக்கவும் மற்றும் அடமானத்தில் இருக்கும் பொருட்களை மீட்கவும் இருக்கிறேன். முக்கியமாக எனது இரண்டு குழந்தைகளுக்கும் வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்றார்.
பரிசுக்கான காசோலையை பெற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாரத், பரிசு கிடைத்த பிறகும் எளிமையான வாழ்க்கையையே தொடர விரும்புவதாகவும், தனது குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பயத்தினை இந்த பரிசு போக்கியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மஹ்சூஸ் டிராவை பொறுத்தவரையில் இவ்வளவு பெரிய தொகையை வெல்லும் முதல் நேபாள நாட்டைச் சேர்ந்தவர் பாரத் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் வென்றிருக்கும் தொகை 345 மில்லியன் நேபாள ரூபாய்களுக்கு சமமாகும்.
Also Read | மாடலிங் பெண்கள் தான் டார்கெட்டே.. இளைஞரின் தினுசான உருட்டு.. நம்பிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்..!
மற்ற செய்திகள்