‘இந்த நிலைமையிலும் கைவிலங்கு மாட்ட மறக்கல!’.. “கடமை தவறாத காவல்துறை!” - போலீஸார் பதிவிட்ட ‘வேடிக்கை’ சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனின் East Sussex பகுதியில் திருட்டு கார் சந்தேகத்தின் பேரில் போலீஸார் ஒருவரது காரை நிறுத்தியுள்ளனர்.

‘இந்த நிலைமையிலும் கைவிலங்கு மாட்ட மறக்கல!’.. “கடமை தவறாத காவல்துறை!” - போலீஸார் பதிவிட்ட ‘வேடிக்கை’ சம்பவம்!

ஆனால் காரில் இருந்து இறங்கியதும் அந்த நபர் தப்பியோடத் தொடங்கினார். போலீஸாரும் அவரை துரத்தத் தொடங்கினர். ஓடிய அந்த நபரோ ஒரு பண்ணைக்குள் சென்று பதுங்கிக்கொள்ள முயற்சித்துள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக இருந்த குழி ஒன்றுக்குள் விழுந்துவிட்டார்.

ஆனால் அந்த குழியோ உரம் தயாரிப்பதற்காக மாட்டுச்சாணம் சேகரிப்பதற்காக இருந்த குழி. பரிதாபப்பட்ட போலீஸார் அவருக்கு கை கொடுத்து தூக்கிவிட்டு, கடமையில் கண்ணாக கைக்கு விலங்கு மாட்டினர். பின்னர் உடல் முழுவதும் சாணத்துடன் இருந்த அந்த நபரின் புகைப்படத்தை பகிர்ந்த போலீஸார், ‘கடமை தவறாத எங்கள் போலீஸார் சந்தேக நபரை பிடித்துவிட்டனர். என்ன ஒரே சாணம் நாற்றம்’ என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்