பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எரிவாயு நிலையம் ஒன்றில், எரிவாயு நிரப்பி விட்டு காரில் இருந்த நபர் செய்த விஷயம், பெரிய அளவில் தற்போது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!

                                                                                                           Images are subject to © copyright to their respective owners

இணையத்தில் நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் தொடர்பான வீடியோக்கள் எக்கச்சக்கமாக கொட்டிக் கிடக்கிறது. இதனால், உலகின் எந்த மூலையில் அரிதான ஒரு நிகழ்வு அரங்கேறினாலும் நிச்சயம் எப்படியாவது அவை இணையத்தில் வைரலாகி, பலரது கவனத்தையும் பெறும். இதில் அதிர்ச்சி கலந்த, வினோதமான அல்லது மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையில் என விதவிதமாக நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில் ஒரு சம்பவம் குறித்த வீடியோ தான், தற்போது இணையத்தில் வைரலாகி உலக அளவில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவின் படி இந்த சம்பவம் சீனாவில் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றது. அங்கே அமைந்துள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் சொகுசு காரில் எரிபொருள் நிரப்புவதற்காக ஒருவர் வந்துள்ளார். அவருக்கு அங்கே இருந்த பெண் ஊழியர் ஒருவர் எரிபொருளை நிரப்பி விட, காருக்குள் உள்ளே இருந்தவரும் பணம் கொடுக்கிறார்.

Car owner throws money in road after fill fuel

Images are subject to © copyright to their respective owners

அந்த சமயத்தில், பெண் ஊழியரின் கையில் பணத்தினை கொடுக்காமல் காருக்குள் இருந்தவர் வெளியே போட, அது தரையில் விழவும் செய்கிறது. இதனை அங்கே நிற்கும் பெண், ஒவ்வொன்றாக எடுத்த பின்னர் காரும் அங்கிருந்து கிளம்பி செல்கிறது. இதற்கு மத்தியில், கீழே குனிந்து பணத்தை எடுக்கும் அந்த பெண் ஊழியர் இறுதியில் கண்கலங்குவதும் வீடியோவில் தெரிகிறது.

இதனிடையே, காரில் இருந்த நபரின் செயல் தொடர்பான வீடியோ தற்போது பலரையும் ஆவேசம் அடைய வைத்துள்ளது. மிகவும் தெனாவெட்டாக ஒரு ஊழியரை கூட மதிக்காமல் இப்படி பணத்தை வீசியெறிந்து ஒரு நபர் காரில் கடந்து சென்ற விஷயம், பெரிய அளவில் பலரையும் கொந்தளிக்க வைத்ததுடன் அதிர்ச்சியையும் உண்டு பண்ணி உள்ளது.

PETROL

மற்ற செய்திகள்