கேன்சர் நோயாளிகளை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து.. வரலாற்றிலேயே முதல்முறையாக சாதனை படைத்த மருத்துவர்கள்.. முழுவிபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சோதனை முறையில் அளிக்கப்பட்ட மருந்து கேன்சர் கட்டிகளை 100 சதவீதம் அகற்றியுள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். உலகம் முழுவதும் இதுதான் டாக் ஆஃப் த டவுன் ஆக இருக்கிறது.
Also Read | "அது பாம்பு இல்ல".. வீட்டில் பாம்புடன் வசித்து வரும் பெண் சொன்ன 'அதிர வைக்கும்' பதில்..!
நவீன கண்டுபிடிப்புகளும் மருத்துவ ஆராய்ச்சிகளும் மனிதகுலத்திற்கு பல்வேறு கொடைகளை அளித்திருக்கின்றன. இருப்பினும் கேன்சர் நோய் காரணமாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு பல லட்சக்கணக்கில் இருக்கிறது. இதற்கான ஆய்வுகளை உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு வளர்ந்த நாடுகள் முன்னெடுத்துவருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் கேன்சர் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட மருந்து, அவர்களை 100 சதவீதம் குணப்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருப்பது உலகம் முழுவதும் மகிழ்ச்சியலையை உருவாக்கியுள்ளது.
சோதனை
மலக்குடல் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட 18 நபர்களுக்கு டோஸ்டார்லிமாப் (Dostarlimab) என்ற மருந்தினை 6 மாத காலத்திற்கு அளித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். இதனிடையே 6 மாதங்களுக்கு பிறகு அவர்களின் உடம்பில் இருந்த கேன்சர் கட்டிகள் மறைந்திருக்கின்றன. டோஸ்டார்லிமாப் என்பது மனித உடலில் மாற்று ஆன்டிபாடிகளாக செயல்படும் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மூலக்கூறுகளைக் கொண்ட ஒரு மருந்து ஆகும்.
18 நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான அளவில் இந்த மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நோயாளிகளின் உடம்பில் இருந்த கேன்சர் கட்டிகள் முழுமையாக அழிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், எண்டோஸ்கோபி; பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி, PET ஸ்கேன் அல்லது MRI ஸ்கேன் ஆகிய பரிசோதனையில் நோயாளிகளின் உடம்பில் கேன்சர் கட்டிகள் மறைந்திருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.
வரலாற்றில் முதல்முறை
மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டுள்ள நோயாளிகள் இதற்கு முன்னர் கீமோதெரபி, கதிர்வீச்சு மற்றும் ஊடுருவும் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு உட்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு இனி மேலும் எந்த சிகிச்சையும் தேவையில்லை என மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரின் டாக்டர் லூயிஸ் ஏ. டயஸ் ஜே இதுபற்றி பேசுகையில் "புற்றுநோய் வரலாற்றில் இதுவே முதல்முறை" என்றார்.
சிகிச்சை குறித்து விவரித்த மருத்துவர்கள்," சோதனைக்காக, நோயாளிகள் ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் Dostarlimab ஐ எடுத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் புற்றுநோயின் ஒரே நிலைகளில் இருந்தனர். அவர்களது மலக்குடலில் மட்டுமே கேன்சர் இருந்தது. மற்ற உறுப்புகளுக்கு பரவவில்லை" என்றனர்.
சோதனையில் வெற்றியடைந்த இந்த மருந்து பரவலாக அனைத்து கேன்சர் நோயாளிகளுக்கும் பலனைக் கொடுக்குமா என்ற இறுதிக்கட்ட ஆய்வில் இறங்கியுள்ளனர் மருத்துவர்கள். இது வெற்றியடையும் பட்சத்தில் மருத்துவ உலகின் பெரும் பாய்ச்சலாக இந்த ஆய்வு கருதப்படும்.
Also Read | இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் T20 போட்டிகள்.. சூடு பிடிக்கும் டிக்கெட் விற்பனை! விலை எவ்வளவு தெரியுமா?
மற்ற செய்திகள்