"உலகின் முதல் கர்ப்பிணி மம்மி'ய ஆய்வு செஞ்சப்போ.." மிரண்டு போன ஆராய்ச்சியாளர்கள்.. "2000 வருசத்துக்கு முன்னாடியே இப்டி நடந்துருக்கா??"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மம்மி என்பது தற்செயலாக அல்லது, இயற்கையாகவோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் உடலைக் குறிப்பது தான்.

"உலகின் முதல் கர்ப்பிணி மம்மி'ய ஆய்வு செஞ்சப்போ.." மிரண்டு போன ஆராய்ச்சியாளர்கள்.. "2000 வருசத்துக்கு முன்னாடியே இப்டி நடந்துருக்கா??"

Also Read  | "இங்க இருக்குற செடி'ய தொட்டா அவ்ளோ தான்.." Gate'ல இருக்கும் Warning.. "பேர கேட்டாலே பீதியா இருக்கே.." பகீர் கிளப்பும் தோட்டம்

எகிப்து நாட்டில் ஆயிரக்கணக்கான மம்மிகள் இருப்பதை பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். இங்குள்ள பல பிரமிடுகளிலும், பூமியிலும் நிறைய மம்மிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன.

இப்படி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புதைத்து வைக்கப்பட்டுள்ள மம்மியின் உடலை வெளியே எடுக்கும் ஆராய்ச்சியாளர்கள், எந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பது பற்றியும், அவர்கள் எந்த உணவு வகைகளை உண்டு வந்தார்கள் என்பது உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு அறிந்து கொள்வார்கள்.

இப்படி மம்மியைச் சுற்றி ஆராய்ச்சிகள் நடைபெறும் போது, மக்கள் பலரும் வியந்து போகும் அளவிற்கும் சில நேரம் நிறைய அரிய விஷயங்கள் வெளியே தெரிய வரும். அப்படி ஒரு மம்மி குறித்து தற்போது தெரிய வந்துள்ள தகவல், பலரையும் வியப்பில் ஆழ்த்தி மிரண்டு போக செய்துள்ளது.

Cancer traces found in egyptian mummy before 2000 years

சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மியை போலாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று, ஆய்வு மேற்கொண்டுள்ளது. "Mysterious lady" என அந்த மம்மிக்கு ஆராய்ச்சியாளர்கள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதன் மண்டை ஓட்டை ஆயுவுக்கு உட்படுத்தி உள்ளனர். அப்போது, அதில் வழக்கத்திற்கு மாறான சில தடயங்கள் இருந்ததாகவும், அவை Nasopharyngeal Cancer எனப்படும் புற்று நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு இருக்கும் தடயம் போலவும் இருந்துள்ளது.

இதனால், மூக்கில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக, அந்த மம்மி முன்பு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மம்மி தொடர்பான பல்வேறு ஆய்வு முடிவுகள், ஆய்வாளர்களைக் கூட வியப்பில் ஆழ்த்தி வரும் சூழ்நிலையில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மி, புற்று நோய் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், பலரையும் மிரண்டு போகச் செய்துள்ளது.

Cancer traces found in egyptian mummy before 2000 years

முன்னதாக, இந்த ஆராய்ச்சியின் தொடக்கத்தில், அது முன்பு வாழ்ந்த ஒரு ஆண் பாதிரியாரின் மம்மி என கூறப்பட்டது. ஆனால், பின்பு அது ஒரு பெண் மம்மி என்பதும், அவர் இறந்த போது கர்ப்பிணியாக இருந்துள்ளதும் பின்னர் தெரிய வந்தது. உலகின் முதல் கர்ப்பிணி மம்மியும் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. புற்று நோய் காரணமாக, இந்த மம்மி உயிரிழந்த தகவல் ஒருபுறம் இருக்க, கர்ப்பிணி பெண் என்பதும் அதிக பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.

மேலும், மரணத்தின் காரணம் என்ன என்பது பற்றி அறிய தொடர்ந்து ஆராயிச்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதே போல, புற்றுநோய் இல்லாமல் வேறு காரணங்களாக இருக்குமா என்பதை அறியவும், மண்டை ஓட்டில் தடயங்கள் இருந்த பகுதி, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Also Read | "யாரும் போன் எடுக்கல, நீங்க தான் 'Help' பண்ணனும்.." பதறிய பெண்.. காரணம் கேட்டு கடுப்பான 'போலீஸ்'

MUMMY, EGYPTIAN MUMMY, CANCER FOUND IN MUMMY

மற்ற செய்திகள்