Radhe Others USA
ET Others

ICU வில் உரிமையாளர்.. 40 நாள் ஹாஸ்பிடல் வாசல்லயே நின்ன பாசக்கார நாய்க்குட்டி.. கடைசியா வெளில வந்தப்போ.. நெகிழ வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

செல்லப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு அவற்றை விட்டு ஒருபோதும் தம்மால் இருக்க முடியாது என்ற உண்மை நன்றாகவே தெரிந்து இருக்கும். எப்போதும் நம்மையே சுற்றிவரும் இந்த பிராணிகள் நம்முடைய வாழ்வின் அங்கமாகவும் மாறிவிடுகின்றன. நாம் அவற்றிடம் இருந்து விலகிப் போனாலும் அவை நம்மை விட்டு ஒருபோதும் விலகுவது இல்லை.

ICU வில் உரிமையாளர்.. 40 நாள் ஹாஸ்பிடல் வாசல்லயே நின்ன பாசக்கார நாய்க்குட்டி.. கடைசியா வெளில வந்தப்போ.. நெகிழ வைக்கும் வீடியோ..!

ஏடிஎம் வாசல்ல மயங்கி விழுந்த அப்பா.. என்ன நடக்குதுன்னு தெரியாம அழுத 2 வயது மகன்.. திண்டுக்கல்லில் நடந்த சோகம்..!

இப்படி, தனது உரிமையாளர் மருத்துவமனையில் இருந்த 40 நாட்களும் அந்த மருத்துவமனையின் வாசலிலேயே ஒரு நாய் நின்று இருக்கிறது. சிகிச்சை முடிந்து உரிமையாளர் வந்தவுடன் அவருடன் ஜாலியாக விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

கேன்சர்

மரியா என்னும் பெண்மணி கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதற்க்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படவே இவரது செல்ல நாயான அமோரா அந்த மருத்துவமனையின் வாசலிலேயே நின்று இருந்திருக்கிறது. கடைசியாக சிகிச்சை முடிந்து 40 நாட்களுக்கு பின்னர் மரியாவை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் அனுமதி அளித்து இருக்கின்றனர்.

அப்போது மரியாவை வீல் சேரில் உட்கார வைத்து வெளியே செவிலியர் அழைத்துச் சென்றிருக்கிறார். இன்னொரு செவிலியர் வாசலில் காத்திருந்த அமோராவை தூக்கிவந்து மரியாவிடம் கொடுத்து இருக்கிறார்.

துள்ளல்

உரிமையாளரிடம் வந்து சேர்ந்த பின்னர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த செல்ல நாய் அமோரா தனது பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக தனது உரிமையாளரின் முகத்தை நாவால் நக்கி விளையாடி இருக்கிறது. 40 நாட்கள் கழித்து தன்னுடைய செல்ல அமோராவை கண்டதும் மரியாவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் தனது நாயினை இறுக அணைத்துக்கொள்கிறார்.

அந்த வீடியோவின் கீழே," 40 நாட்கள் கடுமையான சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு வெளியே வந்த மரியா தனது தோழியான அமோராவை சந்தித்தார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிகிச்சையின் பலனாக கேன்சரில் இருந்து வெளியேறிய மரியா தனது செல்ல நாயுடன் தனது வீட்டிற்குத் திரும்பி இருக்கிறார். தன்னுடைய உரிமையாளருக்காக வாசலில் காத்திருந்த நாய், இறுதியில் அவரோடு துள்ளிக் குதித்து விளையாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

 

"ஸ்கூலுக்கு போக கஷ்டமா இருக்கு.. எதாவது உதவி செய்ங்க சிஎம் சார்"..கோரிக்கை வைத்த மாணவி.. MLA கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

 

CANCER PATIENT, PET DOG, REUNITE, ICU, செல்லப் பிராணிகள், கேன்சர்

மற்ற செய்திகள்