உருவகேலிக்கு எதிரான கலகக்குரல்.. கனேடிய இந்திய வம்சாவளி டிக்டாக் பிரபலம் 21 வயதில் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலமான மேஹா தாகூர் (Megha Thakur) உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள செய்தி பல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
21 வயதே ஆன மேஹா தாகூர் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். கனடா வாழ் டிக்டாக் பிரபலமாக திகழ்ந்து வந்த இவரை கிட்டத்தட்ட 20 லட்சம் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பின்தொடர்ந்து வந்தனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
மேகாவின் பள்ளிப்பருவம் அவருக்கு கடினமானதாகவே இருந்துள்ளது. ஆம், மேகாவை சக பள்ளி மாணவர்கள் அவருடைய ஒல்லியான உடல்வாகுவால் கேலி செய்ததாகவும், அவர் அழகில்லை என சொல்லி பாடி ஷேமிங் பண்ணியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இவற்றால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மேகா தாகூர், பின்னர் தன்னை தானே விரும்பி, ஃபோட்டோஷூட்கள் எடுத்துக் கொள்வது, தன்னம்பிக்கை வீடியோ பதிவுகளை போடுவது பலருக்கும் இதுகுறித்து மோட்டிவேஷனலாக பேசுவது என இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளார்.
இந்நிலையில் தான் மேஹா தாகூர் உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோர் தகவல் வெளியிட்டுள்ளனர். எனினும் மேகா தாகூரின் இறப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
மற்ற செய்திகள்