பொருட்கள் வாங்க மளிகை கடைக்கு சென்ற 'பெண்'.. வெளிய வர்றப்போ லட்சாதிபதி.! தாறுமாறாக அடித்த 'அதிர்ஷ்டம்'!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அதிர்ஷ்டம் என்பது ஒருவருக்கு எந்த நேரத்தில், எந்த வடிவில் வரும் என்பதே தெரியாது. மிகவும் கடுமையாக அவரின் வாழ்நாட்கள் சென்று கொண்டிருக்கும் போதோ, அல்லது வழக்கமாக வாழ்நாள் சென்று கொண்டிருக்கும் போதோ, ஏதாவது ஒரு வழியில் வேற மாதிரி அதிர்ஷ்டம் அடிக்கும்.

பொருட்கள் வாங்க மளிகை கடைக்கு சென்ற 'பெண்'.. வெளிய வர்றப்போ லட்சாதிபதி.! தாறுமாறாக அடித்த 'அதிர்ஷ்டம்'!!

அப்படி தான் பெண் ஒருவர் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற சமயத்தில், கொஞ்சம் கூட அவர் எதிர்பார்க்காத ஒரு இன்ப அதிர்ச்சி அவருக்கு காத்திருந்தது.

கனடாவின் நியூ பிரன்ஸ்விக் என்னும் மாகாணத்தை சேர்ந்தவர் டொன்னா ஸ்டீவ்ஸ். இவர், கடந்த சில தினங்களுக்கு முன் தனது வீட்டின் அருகே உள்ள மளிகை கடை ஒன்றிற்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அவர் சில வாரங்கள் முன்பு வாங்கி இருந்த 6/49 என்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கி இருந்த நிலையில், ஏதேனும் பரிசு விழுந்ததா என எதேச்சையாக அங்கே லாட்டரி முடிவுகளை பார்த்துள்ளார்.

அப்போது அதன் முடிவுகளைக் கண்டு, டொன்னா இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். காரணம், அவர் சில வாரங்களுக்கு முன்பு வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 1 மில்லியன் டாலர் பரிசாக விழுந்துள்ளது. இந்தியாவில் இதன் மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். இது பற்றி மகிழ்ந்து போன டொன்னா, தனது குடும்பத்தினருடன் இந்த செய்தியை பகிர வேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளார்.

canada woman won lottery for one million dollar in grocery shop

"முதலில் எனது மகளிடம் தான் இந்த விவரத்தினை நான் தெரிவித்தேன். அவரும் இதனைக் கேட்டு மிக உற்சாகம் அடைந்தாள். என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அப்படிப்பட்ட நேரத்தில் கைக்கு பணம் வந்துள்ளதால், அதனை திருமண செலவுக்கு நான் பயன்படுத்துவேன்" என மிகுந்த மகிழ்ச்சியுடன் டொன்னா குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமில்லாமல், மகளின் திருமண செலவு போக மீதி பணத்தினை புதிய வீடு வாங்க உள்ளதாகவும், பேரக் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக சேமிக்க உள்ளதாகவும் டொன்னா தெரிவித்துள்ளார். மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற போது, சில வாரங்களுக்கு முன் வாங்கிய லாட்டரிக்கு பரிசு கிடைத்ததால், பணக்காரியாக பெண் ஒருவர் வெளியே வந்த செய்தி, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

LOTTERY, CANADA, WOMAN

மற்ற செய்திகள்