"அட இது தெரியாம இருந்துட்டேனே".. ஒரே லாட்டரியில் 385 கோடி ரூபாய்.. பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ட்விஸ்ட்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒரு நபரது வாழ்க்கையில் எந்த சமயத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரிவிக்க முடியாது. வாழ்கையில் நிறைய கஷ்டங்கள் நிறைந்து சென்று கொண்டிருக்கும் போது, அவர்கள் எதிர்பாராத சமயத்தில் ஒரு சம்பவம் நடந்து மொத்த வாழ்க்கையையும் அப்படியே புரட்டிப் போடும்.

"அட இது தெரியாம இருந்துட்டேனே".. ஒரே லாட்டரியில் 385 கோடி ரூபாய்.. பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ட்விஸ்ட்!!

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | காலிங் பெல் வேலை செய்யல.. போனையும் எடுக்கல... வீட்டின் பின்புறம் சடலமாக கிடந்த இளைஞர்..!

இந்த நிலையில், கனடாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரு செம அதிர்ஷ்டம் நடைபெற்றுள்ளது. கனடா, அமெரிக்காவின் சில மாகாணங்கள், கேரள மாநிலம், துபாய் உள்ளிட்ட பல இடங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனை என்பது சட்டப் பூர்வமாக இயங்கி வருகிறது.

வழக்கமாக லாட்டரி டிக்கெட் வாங்கும் நபர்கள் பலரின் வாழ்க்கை, லாட்டரியில் கிடைக்கும் பரிசுத் தொகை மூலம் அப்படியே தலைகீழாக மாறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி தான் தற்போது கனடாவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நடந்துள்ளது.

கனடா நாட்டைச் சேர்ந்தவர் கமிலியா. மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து வரும் கமிலியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து வாங்கிய லாட்டரிக்கு பரிசு ஏதும் கிடைத்து விட்டதா என்பதை பார்க்காமலே கமிலியா விட்டு விட்டதாக தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் கேஸ் ஸ்டேஷனுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றிருந்த கமிலியா, எதேச்சையாக தான் வாங்கிய லாட்டரிக்கு பரிசு விழுந்ததா என்பதையும் பரிசோதித்து பார்த்துள்ளார். அப்படி இருக்கையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தான் வாங்கிய லாட்டரிக்கு பரிசு விழுந்திருப்பதை அறிந்து உற்சாகத்தில் திளைத்து போய் உள்ளார் கமிலியா. அது மட்டுமல்லாமல் சுமார் 60 மில்லியன் கனேடியன் டாலர்களை இதில் பரிசாக வென்றுள்ளார் அவர். இது இந்திய மதிப்பில் சுமார் 375 கோடி ரூபாய் ஆகும்.

Canada woman won 60 million dollars in lottery

Images are subject to © copyright to their respective owners.

இவ்வளவு பெரிய பரிசு தொகை தனக்கு லாட்டரி மூலம் கிடைத்துள்ளதால் தான் பார்த்து வரும் வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் தொடங்கி பல பேருக்கு வேலை கொடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பயன்படும் வகையிலும் பணத்தை செலவழிக்க போவதாகவும் அவர் உற்சாகத்தில் தெரிவித்துள்ளார்.

சிலருக்கு வாழ்க்கையில் எந்த நேரம் அதிர்ஷ்டம் நிகழும் என காத்துக் கொண்டிருக்கும் சூழலில் ஒருவர் தனக்கு அதிர்ஷ்டம் அடித்தது தெரியாமல் இரண்டு மாதங்களாக இருந்த விஷயமும் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "1 மணிநேரம் முன்பு போன் பண்ணான்.. நான் எடுக்கல".. இளம் உதவி இயக்குனர் திடீர் மரணம்.. வேதனையில் ஷாந்தனு!!

CANADA, WOMAN, LOTTERY

மற்ற செய்திகள்