திடீர்ன்னு வீட்டின் ஜன்னலை தட்டிய பெண்.. திறந்து பார்த்த பிறகு நடந்த சம்பவம்.. "வாழ்க்கையிலேயே இனி மறக்க முடியாதாம்"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சமீபத்தில் தனது வீட்டின் ஜன்னலை யாரோ ஒரு நபர் தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்த நபருக்கு மறக்க முடியாத நாளாக அன்றைய தினம் அமைந்த விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது.

திடீர்ன்னு வீட்டின் ஜன்னலை தட்டிய பெண்.. திறந்து பார்த்த பிறகு நடந்த சம்பவம்.. "வாழ்க்கையிலேயே இனி மறக்க முடியாதாம்"

கனடாவின் ஒன்றாரியோவில் வாழ்ந்து வருபவர் Denny. இவர் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

அப்போது மாலை நேரத்தில் அவர்கள் உணவு தயார் செய்து கொண்டிருந்த சமயத்தில் யாரோ திடீரென வீட்டின் ஜன்னலைத் தட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது டென்னி கதவை திறந்து பார்க்க குளிரில் பெண் ஒருவர் நடுங்கிய படி அங்கே நின்று கொண்டிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. அவரை உள்ளே வரும்படி டென்னி அழைக்க அந்த பெண்ணோ தனது குடும்பத்தினர் பயணித்த கார் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதாகவும் மற்றவர்கள் காருக்குள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கனடாவில் சமீபத்தில் பயங்கர புயல் வீசி இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இதனால், அந்த பெண்ணின் குடும்பத்தினரை அழைத்து வர, அவருடன் சென்றுள்ளார் டென்னி. கார் சிக்கிய பகுதிக்கு சென்ற அவர்கள், அந்த பெண்ணின் கார் மட்டுமில்லாமல் மேலும் இரண்டு கார்கள் அங்கே சிக்கிக் கொண்டிருப்பததையும் கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அனைவரையும் அதில் இருந்து மீட்ட டென்னி, தங்களின் வீட்டிற்கும் வரவேற்றதாக தகவல்கள் கூறுகின்றது.

இதனை தொடர்ந்து, டென்னியின் வரவேற்பை ஏற்று அவரது வீட்டிற்கு சுமார் 10 விருந்தினர்கள் வந்துள்ளனர். அங்கே விருந்தினர்களாக மாறி தங்கிய அவர்கள், ஏற்கனவே பழக்கம் ஆனது போன்றும் நடந்து கொண்டுள்ளனர். குழந்தைகள் ஒரு பக்கம் சேர்ந்து விளையாட, மறுபக்கம் பெரியவர்கள் அரட்டை அடித்துக் கொண்டும் இருந்துள்ளனர்.

Canada woman knocked man house window at evening

இரவு டென்னியின் வீட்டில் அனைவரும் தங்கி கொள்ள, மறுநாள் அவரது உறவினர் ஒருவரின் டிராக்டர் உதவியால் கார்கள் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. பெண் ஒருவர் வந்து ஜன்னல் கதவை தட்ட, அதன் மூலம் கிடைத்த 10 உறவுகளுடன் தொடர்ந்து பந்தத்தை மேம்படுத்திக் கொள்ள போவதாகவும் டென்னி மற்றும் அவரது மனைவி ஆகியோர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

CANADA

மற்ற செய்திகள்