'ஹாரி - மேகன் தம்பதிக்கு'... 'இதுக்கு அப்புறம் எங்களால’... ‘பாதுகாப்பு அளிக்க முடியாது’... ‘பின்வாங்கிய அரசு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக கனடா அரசு அறிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஹாரி - மேகன் தம்பதிக்கு'... 'இதுக்கு அப்புறம் எங்களால’... ‘பாதுகாப்பு அளிக்க முடியாது’... ‘பின்வாங்கிய அரசு!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, கடந்த 2018-ம் ஆண்டு, கனடாவில் வசித்து வந்த அமெரிக்க நடிகை மேகனை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு, ஆர்ச்சி என்ற, 8 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சுதந்திரமாக வாழ விரும்புவதால், கடந்த மாதம் அரசு குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகுவதாக, ஹாரி-மேகன் தம்பதி அறிவித்தனர். இதற்கு ராணி 2-ம் எலிசபெத் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறினர்.

வான்கூவர் தீவின் விக்டோரியா பகுதியில் வசித்து வரும் அவர்களுக்கு, மக்களின் எதிர்ப்புகளுக்கிடையே பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் கனடா அரசு இருந்தது. வரும் மார்ச் 31-ம் தேதி முதல் அரச பதவிகளில் இருந்து முற்றிலும் ஹாரி-மேகன் தம்பதி விலக உள்ளனர். இந்நிலையில் சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட நபர்கள் என்ற காரணத்தினால், ஹாரி தம்பதிக்கு அளித்து வந்த சிறப்பு பாதுகாப்பை மார்ச் 1-ம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள போவதாக கனடா போலீசார் தெரிவித்துள்ளனர்.

அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறிய தம்பதிக்கு தங்கள் வரி பணத்தில் பாதுகாப்பு வழங்க பெரும்பாலான கனடா மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

HARRY, MEGHAN, COUPLE, SECURITY, CANADA, BRITISH, ENGLAND, GOVERNMENT