‘இதுவே நமக்கு வெற்றிதான்! கெத்தா சொன்ன கிரேட்டா’.. ‘அந்த போட்டோவ போட்டதுக்கு மன்னிச்சுடு தாயீ!’.. ‘மண்டியிட்ட ஆயில் நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சுற்றுச் சூழல் போராளி மற்றும் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக தொடர் போராட்டங்களை நட த்தி வந்தவர். இவருக்கு உலகம் முழுவதும் நிறைய ஆதரவாளர்கள் இருப்பினும் இவரது சமரசமற்ற அணுகுமுறையால் பல எதிர்மறையான விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறார்.
இந்நிலையில் கிரேட்டா தன்பெர்க்கை பாலியல் ரீதியாக தரம் தாழ்த்தும் ஓவியத்தை கனடாவைச் சேர்ந்த எக்ஸ் சைட் எண்ணெய் நிறுவனம் வெளியிட்டது. எனினும் கனடா ஆயில் நிறுவனத்தின் இந்த செயலுக்கு பல்வேறு வகையிலும் கண்டனங்கள் எழுந்தது.
இதனையடுத்து தான் செய்த தவறை திருத்திக் கொள்வதாகக் கூறி, இதற்கென மன்னிப்புக் கோரிய எண்ணெய் நிறுவனம், சர்ச்சைக்குரிய அந்த புகைப்படத்தை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக இவர்களின் இந்த வகையான எதிர்ப்பு நம் வெற்றியை உறுதி செய்கிறது என்று
They are starting to get more and more desperate...
This shows that we’re winning. https://t.co/NLOZL331X9
— Greta Thunberg (@GretaThunberg) February 29, 2020
கிரேட்டா தனது பக்கத்தில் ட்வீட் பதிவிட்டார்.