'தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு'... 'துப்பாக்கியை வச்சு ஆட்சியை புடிச்சா பயந்துருவோமா'... கனடா பிரதமரின் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கான் விவகாரம் உலகநாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தங்களது படைகளை அமெரிக்கா வாபஸ் பெற ஆரம்பித்த நாட்களிலிருந்தே தாலிபான்கள் தங்கள் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் ஆட்சியைப் பிடித்து விட்டோம் என அறிவித்து விட்டாலும் பல்வேறு நாடுகளில் தாலிபான்கள், பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் தாலிபான்கள் அமைக்கவிருக்கும் அரசை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
அதேநேரத்தில் ''நாங்கள் எந்தவித எதிரிகளையும் சம்பாதிக்க விரும்பவில்லை. எனவே சர்வதேச சமூகம் எங்களை அங்கீகரிக்க வேண்டும்'' எனத் தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்நிலையில் ஆப்கான் விவகாரம் குறித்துப் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ''தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் கனடாவுக்கு இல்லை.
அவர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைப் பலவந்தமாகத் துப்பாக்கியின் துணையோடு தூக்கியெறிந்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறார்கள். மேலும், கனடா நாட்டின் சட்டத்தின்படி, தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பாகவே அங்கீகரிக்கப்படுவார்கள்'' என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தாலிபான்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் சுமார் 20,000 ஆப்கானியர்களை கனடாவில் குடியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாகக் கனடா ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசைப் பாகிஸ்தான் அங்கீகரித்துள்ளது.
சீனா தாலிபான் அரசுடன் நட்பு ரீதியிலான உறவை மேம்படுத்தத் தயார் என, தாலிபான்களுக்குச் சாதகமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கனடா பிரதமரின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மற்ற செய்திகள்