‘வடிவேலு பாணியில் திரும்பத் திரும்ப பேசிய கொலையாளி!’.. ‘கடைசியில் நீதிபதியிடம் வைத்த கோரிக்கை!’.. அதன் பின் செய்த வைரல் காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அண்மையில் கனடாவின் Red Deer என்கிற இடத்தில் உள்ள Walter Reynolds என்கிற மருத்துவரை சந்திக்க சென்ற Deng Mabiour என்கிற நபர் திடீரென அவரை சுத்தியலால் தாக்கிக் கொன்ற சம்பவம் பரபரப்பானது.

‘வடிவேலு பாணியில் திரும்பத் திரும்ப பேசிய கொலையாளி!’.. ‘கடைசியில் நீதிபதியிடம் வைத்த கோரிக்கை!’.. அதன் பின் செய்த வைரல் காரியம்!

இந்நிலையில் Mabiour-ஐ போலீஸார் கைது செய்தனர். கைது செய்தபோது அவரது கையில் சுத்தியலும், பட்டாக்கத்தியும் இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் குற்றம் சாட்டப்பட்ட Mabiour நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

canada doctor Walter Reynolds murderer request to judge

அப்போது நீதிமன்றத்தில் அவர் கேள்விக்குட்படுத்தப்பட்டார். அதற்கு பதில் அளித்த  Mabiour தனக்கு எதுவும் நினைவில்லை என்றும், தனக்கு உடல் நிலை சரியில்லாததாகவும், உடல் நிலை சரியானால்தான் தன்னால் எதுவும் கூற முடியும், ஆக எனக்கு உடல்நிலையை குணப்படுத்த ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிவிட்டு, யாரும் எதிர்பார்க்காத வகையில் அசாதாரணமாக,  “ஹாஹா” என சிரித்துள்ளார்.

canada doctor Walter Reynolds murderer request to judge

ஆனால் மனம் கேட்காத நீதிபதியோ, திரும்பவும் கேட்ட கேள்விகளையே கேட்க, அதற்கும் சொன்ன பதில்களையே  Mabiour திரும்பச் சொல்ல, அப்செட் ஆன ஜட்ஜ், இவ்வழக்கை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

மற்ற செய்திகள்