'ஏரியா'ல லாக்டவுன் போட்ருக்காங்க... இப்போ எப்படி வெளிய போறது??..." 'பெண்' செய்த 'காரியம்'... "ஆத்தி என்ன இப்டி எல்லாம் யோசிக்குறாங்க??!!"
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவின் கியூபெக் (Quebec) என்னும் பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அப்பகுதியில் இரவு 8 மணியில் இருந்து மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் வெளியே நடமாடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதே போல தங்களின் இருப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் தங்களது நாயை வெளியே அழைத்துச் செல்ல மட்டும் தளர்வும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பெண் ஒருவர் இரவு 9 மணியளவில் தனது கணவரை நாய் கட்ட பயன்படுத்தப்படும் வார் ஒன்றை பயன்படுத்தி கட்டிப் போட்டு நாயைப் போல வெளியே அழைத்துச் சென்றுள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய அந்த பெண்ணை அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர்.
அதற்கு பதிலளித்த அந்த பெண், தான் ஊரடங்கு விதிகளை மீறவில்லை என்றும், நாயை அழைத்துச் செல்ல தளர்வுகள் உள்ளது என்றும் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், உங்கள் கணவர் நாயில்லை என போலீசார் கூறியும், அந்த பெண் ஒத்துழைக்காமல் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இறுதியில், இருவருக்கும் சேர்த்து 3000 டாலர்களை அபராதமாக விதித்தனர்.
கொரோனா விதிகளை மீறாமல் இருக்கத் தனது கணவரையே நாயாக மாறச் செய்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்ற செய்திகள்