'இவர் அடிக்கிற பால் எல்லாமே சிக்ஸர் தான்'... 'இத சொல்றதுக்கு பெரிய துணிச்சல் வேணும்'... தாலிபான்களுக்கு எதிராக அடுத்த வெடியை கொளுத்திய கனடா பிரதமர்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆகஸ்ட் 31ஐ தாண்டி மேற்கத்தியப் படைகள் காபூலில் இருந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனத் தாலிபான்கள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானை முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டிற்குள் தாலிபான்கள் கொண்டு வந்துள்ள நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். இது ஒரு நாட்டின் பிரச்சனை என்ற அளவில் இல்லாமல் உலக நாடுகளின் பாதுகாப்பிற்கும் இதில் பங்கு இருப்பதால் அடுத்து என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்த தீவிரமான விவாதமும் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தாலிபான்கள் குழு தீவிரவாத குழு என்பதில் ஐயமில்லை, அவர்கள் மீது மீது தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் எனக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று ஜி7 நாடுகளின் தலைவர்கள் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்கல், இத்தாலி பிரதமர், ஜப்பான் பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் காணொலி வாயிலாகச் சந்தித்து ஆப்கான் நிலவரம் குறித்து ஆலோசித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரூடோ, "கனடா எப்போதோ தாலிபான்களைத் தீவிரவாதிகளை அறிவித்துவிட்டது. அவர்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். அதனால் அவர்கள் மீது பல்வேறு தடைகளை விதிப்பது குறித்து நிச்சயமாகப் பரிசீலிக்கலாம்" என்று கூறினார்.
இதற்கிடையே ஜி7 மாநாட்டில் ஆப்கானிஸ்தானில் வெளியேறும் நாளை ஆகஸ்ட் 31ஐ தாண்டி நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், ஆகஸ்ட் 31ஐ தாண்டி மேற்கத்தியப் படைகள் காபூலில் இருக்கலாம் என்று நினைத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தாலிபான்கள் ஆட்சி அமைப்பதில் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகச் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், கனடா பிரதமரின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்