COBRA M Logo Top

"12 வருஷம் ஆகியும் புடிக்க முடியல".. திக்கித் திணறும் போலீஸ்.. "துப்பு குடுத்தா 50,000 டாலராம்".. தீவிரமாக இறங்கிய அதிகாரிகள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது இதுகுறித்து போலீசார் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

"12 வருஷம் ஆகியும் புடிக்க முடியல".. திக்கித் திணறும் போலீஸ்.. "துப்பு குடுத்தா 50,000 டாலராம்".. தீவிரமாக இறங்கிய அதிகாரிகள்

Also Read | "ஆறு வருசமா love பண்ணி, ஒண்ணா ஊர் சுத்துனோம், ஆனா".. காதலன் யாருன்னு தெரிஞ்ச உண்மை.. உடைந்து போன இளம்பெண்!!

கனடாவின் Orangeville நகரை சேர்ந்தவர் Sonia Varaschin. இவருக்கு 42 வயதாக இருக்கும் போது, அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதியன்று திடீரென காணாமல் போனார்.

இதனைத் தொடர்ந்து, சுமார் ஒரு வாரம் கழித்து, சோனியாவின் உடல் காட்டுப் பகுதி ஒன்றில் கிடைத்துள்ளது. மேலும், சோனியா கொலை செய்யப்பட்டு தான் உயிரிழந்தார் என்பதும் உறுதியானது.

அப்படி சோனியா உயிரிழந்து சுமார் 12 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவர் கொலையை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். கொலை தான் என்பது உறுதியான பிறகும், 12 ஆண்டுகளாக அதை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Canada 12 years in search for person police require help

குற்றப் புலனாய்வு பிரிவின் வழிகாட்டுதலின் படி, இந்த கொலை தொடர்பான விசாரணை தற்போதும் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், இத்தனை ஆண்டுகளாக கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், சோனியாவின் கொலைக்கு காரணமாக இருக்கும் நபருக்கு தண்டனை வழங்க வழிவகை செய்யும் தகவலளிக்கும் நபர்களுக்கு 50,000 டாலர்கள் வரை வெகுமதி வழங்கப்படும் என்றும் தற்போது காவல் துறை அறிவித்துள்ளது.

Canada 12 years in search for person police require help

சோனியாவின் மறைவு தொடர்பாக இதுவரையில் பொது மக்களிடம் இருந்து சுமார் 1,500 க்கும் மேற்பட்ட உதவிக் குறிப்புகள் வரை பெறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால், கொலை செய்த நபரை சரியாக கண்டுபிடிக்கும் துணுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "1,000-க்கும் அதிகமான தேனீக்கள்".. 20 ஆயிரம் முறை கொட்டிய சம்பவம் .. இளைஞருக்கு நடந்தது என்ன??

POLICE, CANADA, SEARCH, PERSON, POLICE

மற்ற செய்திகள்