நடந்து செல்லும் இந்த 'குழந்தைகளுக்கு' அருகே.. ஒரு 'கொடிய' உயிரினம் இருக்கு.. உங்களுக்கு தெரியுதா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இரண்டு குழந்தைகள் நடந்து செல்லும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் இந்த குழந்தைகளின் பாதங்களுக்கு மிக அருகே பாம்புகளிலேயே மிகவும் கொடிய நஞ்சுடைய ஈஸ்டர்ன் பிரவுன் ஸ்நேக் என்னும் பாம்பு இருந்துள்ளது. ஆனால் புகைப்படம் எடுக்கும்போது அதனை யாரும் கவனிக்கவில்லை.

நடந்து செல்லும் இந்த 'குழந்தைகளுக்கு' அருகே.. ஒரு 'கொடிய' உயிரினம் இருக்கு.. உங்களுக்கு தெரியுதா?

பின்னர் புகைப்படத்தை பார்த்த பின்னர் தான் அந்த குழந்தைகளின் தாயாருக்கு இந்த பாம்பு விஷயம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த புகைப்படத்தை தி விக்டோரியா என்னும் அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் இந்த புகைப்படத்தை தங்களது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இந்தப் படத்தில் குழந்தைகளுக்குப் பக்கத்திலேயே இருந்தாலும், யாரையும் தொந்தரவு செய்யாமல் இருக்கும் பாம்பைப் பாருங்கள்.

இந்தப் படம், பாம்புகள் உண்மையில் மூர்க்கமானவை கிடையாது என்றும், அவைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன,'' என தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் எஸ்க்டேல் பகுதியில் உள்ள மிட்டா மிட்டா நதிக்கு அருகில் இந்தப் படம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SNAKE