இறுதிச் சடங்கு நிகழ்வில் வந்த மக்கள்.. யாரும் எதிர்பாரா நேரத்தில் நடந்த அசம்பாவிதம்.. உலகளவில் அதிர வைத்த சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கேமரூன் நாட்டின் தலைநகரான யவுண்டே என்னும் பகுதியில் கனமழை காரணமாக இந்த ஆண்டு பல பேரழிவை சந்தித்தது.

இறுதிச் சடங்கு நிகழ்வில் வந்த மக்கள்.. யாரும் எதிர்பாரா நேரத்தில் நடந்த அசம்பாவிதம்.. உலகளவில் அதிர வைத்த சம்பவம்!!

வெள்ளத்தின் காரணமாக அந்த பகுதியின் உள் கட்டமைப்பு சிதைந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி ஒரு சூழலில் தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் ஒன்று, உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கேமரூன். அந்த நாட்டின் தலைநகரான யவுண்டேவில் உள்ள டமாஸ் என்னும் மாவட்டத்தில் ஒரு நபரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அந்த சமயத்தில், ஏராளமானோர் அங்கே கலந்து கொண்டுள்ளதாவும் தெரிகிறது. சுமார் 20 மீட்டர் உயரத்திற்கு அமைந்திருந்த மணல் மேடு அமைந்துள்ள பகுதி அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவிதம் அங்கே நிகழ்ந்துள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக, மணல் மேடு சரிந்து விழுந்ததால் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடம் வந்த மீட்புக் குழுவினர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்ட நபர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இந்த மண் சரிவில் சிக்கி 14 பேருக்கு மேற்பட்டோர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் ஏராளமானோர் இந்த மண் சரிவில் சிக்கி உள்ளதால், மீட்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

CAMEROON, LAND SLIDE

மற்ற செய்திகள்