'ஐந்தரை லட்சம் பேஸ்புக் பயனாளர்களின் சுய விபரங்கள் திருட்டா?' .. ‘அதுவும் இப்படி ஒரு காரணத்துக்காக?’ .. ‘பிரபல’ கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சிபிஐ வழக்கு!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் மீது சிபிஐ அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது.
பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களை சட்டத்துக்கு புறம்பான வகையில் திருடியதாக இங்கிலாந்தை சேர்ந்த பிரபல அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் இருக்கிற பல லட்சம் பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக புகார் எழுந்ததை அடுத்து, இந்த விஷயம் தீவிரமானது. இதனால் சர்வதேச அளவில் இந்த விவகாரம் பூதாகரமானது.
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தும் என மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்திருந்தார். அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏறக்குறைய ஐந்தரை லட்சம் பயனாளர்களின் தகவல்கள் தேர்தல் பயன்பாட்டுக்காக திருடப்பட்டதாக தெரியவந்தது.
இதனால் அந்நிறுவனத்தின் மீது சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்