VIDEO : "'2020' இனி என்னவெல்லாம் செய்ய காத்திருக்கோ??... " முழுவதும் 'ஆரஞ்சு' நிறமாக மாறிய 'மாநகரம்',.. வேறு கிரகத்தில் இருப்பது போன்று... 'பயத்தை' கிளப்பும் 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் அதிகம் பேர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள மாகாணமாக கலிபோர்னியா உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக அந்த மாகாணத்தில் மின்னல் வேகத்தில் காட்டுத்தீ பரவி வருகிறது.

VIDEO : "'2020' இனி என்னவெல்லாம் செய்ய காத்திருக்கோ??... " முழுவதும் 'ஆரஞ்சு' நிறமாக மாறிய 'மாநகரம்',.. வேறு கிரகத்தில் இருப்பது போன்று... 'பயத்தை' கிளப்பும் 'சம்பவம்'!!!

கலிபோர்னியாவில் ஆண்டு தோறும், கோடை காலங்களில் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் கலிபோர்னியாவின் பல பகுதிகளில் தீ வேகமாக பரவி வருகிறது. சில இடங்களில் மட்டும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வராமல் திணறி வருகின்றனர்.

 

14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த காட்டுத்தீயை அணைக்க போராடி வரும் அதே வேளையில், மொத்தம் 40 கி.மீ வரை தீ பரவி நாசம் செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காட்டுத்தீ விபத்தால் ஒட்டுமொத்தமாக 20 லட்சம் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது. மேலும் 8 பேர் வரை இந்த விபத்தில் உயிரிழந்ததாகவும், சுமார் 3000 கட்டிடங்கள் வரை எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த காட்டுத் தீயால் கிரீக் அகதி முகாமில் உள்ள குடிசைகளிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ளவர்களை அப்புறப்படுத்தியதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

 

மேலும், இந்த விபத்தால் சான் பிரான்சிஸ்கோவின் அனைத்து பகுதிகளும் ஆரஞ்சு நிறமாக காட்சி தருகின்றது. காலை எது மாலை எது என காலநிலை உள்ளதால் மக்கள் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அதே போல, வேறு கிரகத்தில் உள்ளதை போன்ற உணர்வை தருவதாகவும் கலிபோர்னியா மக்கள் பதிவிட்டு வருகின்றனர். 

 

ஏற்கனவே, 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் பல்வேறு துயரங்கள் நடந்து வரும் நிலையில், கலிபோர்னியாவில் நடந்த இந்த காட்டுத்தீ விபத்தும் மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.

மற்ற செய்திகள்