சீனாவை தொடர்ந்து... 'இந்திய' செய்தி சேனல்களுக்கு 'தடை' விதித்த நாடு... இதெல்லாம் ஒரு காரணமா?
முகப்பு > செய்திகள் > உலகம்இந்திய செய்தி சேனல்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டு இருக்கிறது.
சமீபகாலமாக அண்டை நாடான நேபாளம் பல்வேறு வழிகளிலும் இந்தியாவை தொல்லை செய்து வருகிறது. இந்திய எல்லைகளை தன்னுடைய நாட்டுடன் இணைத்து வரைபடம் வெளியிட்டது. எல்லைப்பகுதிகளில் சாலை அமைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தது. இதுதவிர கொரோனா தங்களது நாட்டில் பரவ இந்தியா தான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டியது.
இந்த நிலையில் இந்திய சேனல்கள் நேபாள அரசுக்கு எதிராக தவறான செய்திகளை ஒளிபரப்புவதாக கூறி தூர்தர்ஷன் தவிர மற்ற அனைத்து சேனல்களுக்கும் தடை விதித்து நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை இன்று மாலையில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
மற்ற செய்திகள்