என் Perfume-அ வாங்குனாத்தான்.. எலான் மஸ்க் வச்ச டிமாண்ட்.. ஒரே ட்வீட்டில் பத்திகிட்ட ட்விட்டர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்வாசனை திரவிய தொழிலில் கால் பதித்திருக்கிறார் உலக பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க். இந்நிலையில், அதுகுறித்து மஸ்க் போட்ட ட்வீட் வைரலாக பரவி வருகிறது.
எலான் மஸ்க்
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
வாசனை திரவியம்
இந்நிலையில் 'Burnt Hair' எனும் பெயரில் வாசனை திரவிய தயாரிப்பு தொழிலில் இறங்கியுள்ளார் மஸ்க். ட்விட்டர் பக்கத்தில் தனது பயோவை வாசனை 'திரவிய விற்பனையாளர்' (Perfume Salesman) என மாற்றியிருக்கிறார் மஸ்க். மேலும், இந்த வாசனை திரவியத்தை கிரிப்டோ கரன்சிகள் மூலமாகவும் வாங்கலாம் என அறிவித்திருக்கிறார். இந்த Burnt Hair வாசனை திரவியத்தின் விலை ஒரு பாட்டிலுக்கு 100 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 8,400 ரூபாய்) என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று அவர் போட்ட ஒரு ட்வீட்டில் இந்த வாசனை திரவியம் 20,000 பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சூசகமாக தெரிவித்திருந்தார்.
டிமாண்ட்
இந்நிலையில் இன்று எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில்,"தயவு செய்து என்னுடைய Perfume-ஐ வாங்குங்கள். அப்போது தான் என்னால் ட்விட்டரை வாங்க முடியும்" என பதிவிட்டுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மறுத்ததை தொடர்ந்து அந்நிறுவனம் மஸ்க் மீது வழக்கு தொடுத்திருந்தது. இதனிடையே ட்விட்டர் நிறுவனத்தினை முன்குறிப்பிட்ட தொகைக்கே வாங்கிக்கொள்வதாக மஸ்க் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இந்நிலையில், தனது வாசனை திரவியத்தை வாங்கிகொண்டால் தான் தன்னால் ட்விட்டரை வாங்க முடியும் என அவர் ட்வீட் செய்திருப்பது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்