VIDEO: 'புர்ஜ் கலிஃபாவில் மூவர்ணக் கொடி...' மேலும் இந்தியாவிற்கு ஆதரவாக 'அந்த மூன்று' வார்த்தைகள்...! - வைரலாகும் ஹேஷ்டேக்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் சீக்கிகொண்டிருக்கும் இந்தியாவிற்கு உலகம் முழுவதும் ஆதரவு திரண்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 17,313,163 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14,304,382 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்தாலும் சுமார் 1,95,123 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை முன்பை விட மிக வேகமாக பரவி வருவதாகவும் சுகாதார குழு தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் படும் வேதனையும், மருத்துவ சேவை இல்லாமல் இருக்கும் நோயாளிகளின் வீடியோவும் இதயத்தை நொறுக்கும் வகையில் உள்ளது இதனால் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக உலகின் மிக உயரமான கட்டடமான துபாயின் புர்ஜ் கலிஃபாவில் இந்தியாவிற்கு தைரியமூட்டும் வகையில் இந்தியாவின் மூவர்ண தேசிய கொடி ஒளிரூட்டப்பட்டுள்ளது.
அங்கு மட்டுமில்லாமல் அபுதாபியில் உள்ள அட்னோக் தலைமையகமும் மூவர்ண கொடியால் ஒளியூட்டப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்த்து போராடும் இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உறுதுணையாக இருக்கிறது என அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
#WATCH | United Arab Emirates: Burj Khalifa lights up with tricolour, to show support to India, amid the prevailing COVID19 situation in the country
(Video source: Embassy of India, Abu Dhabi, UAE) pic.twitter.com/Btk2eLhAzy
— ANI (@ANI) April 25, 2021
மற்ற செய்திகள்