'கோடிக்கணக்கில் குவிந்த நிதி'... ‘ஒன்பது வயது சிறுவனின் குடும்பத்தார்’... ‘செய்த நெகிழ வைக்கும் காரியம்’...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தற்கொலை எண்ணத்தில் பேசிய 9 வயது சிறுவனுக்கு உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் திரட்டி தந்த 5 கோடி ரூபாய் கணக்கிலான தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு அவரது குடும்பத்தார் வழங்க உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கோடிக்கணக்கில் குவிந்த நிதி'... ‘ஒன்பது வயது சிறுவனின் குடும்பத்தார்’... ‘செய்த நெகிழ வைக்கும் காரியம்’...!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த பெண் யர்ராகா பேல்ஸ். இவரது 9 வயது மகன் குவாடன், மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், உடல் வளர்ச்சிக் குன்றி காணப்படுகிறான். இதனால், பள்ளியில் சக மாணவர்கள் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்ததால் குவாடன் மிகவும் மனஉளைச்சலுக்குள்ளானான். இந்நிலையில், கடந்த புதன்கிழமை பள்ளியில் இருந்து குவான்டனை அவரின் தாய் காரில் அழைத்து வரும்போது, காரில் அமர்ந்து கொண்டு சிறுவன் குவான்டன் கண்ணீர் விட்டு அழும் காட்சியை வீடியோவா சமூக வலைதளத்தில் தாய் வெளியிட்டிருந்தார்.

அதில், அந்த சிறுவன் குவாடன் பேலஸ், "அம்மா எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் . நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். எனது இதயத்தில் கத்தியால் குத்திக்கொள்ள விரும்புகிறேன். என்னை யாராவது கொன்றுவிட வேண்டும் என விரும்புகிறேன்” என தாயிடம் தேம்பி தேம்பி அழுதான். இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து ஹாலிவுட் ஸ்டார்கள் ஆதரவு கரம் நீட்டினர். மேலும் குயின்ஸ்லாந்தில் ஆல்-ஸ்டார் அணிக்கும், நியூஸிலாந்து மாரியோஸ் அணிக்கம் இடையிலான ரக்பி போட்டி வெள்ளிக்கிழமை நடந்தது. அந்த போட்டியில் நடக்கும் தங்கள் நாட்டு அணியை வழிநடத்திச் செல்லும் மரியாதையை சிறுவன் குவாடனுக்கு வழங்கப்பட்டது.

துவார்ஃபிசம் எனப்படும் வளர்ச்சிக் குன்றிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க காமெடி நடிகர் பிராட் வில்லியம்ஸ் தனது வீடியோவில் ஆறுதல் கூறியுள்ளார். மேலும் குவாடனை கவுரவிக்க GoFundMe என்ற அறக்கட்டளையை தொடங்கி, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு அந்த சிறுவனை டிஸ்னிலேண்டிற்கு அனுப்பவுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் 10 ஆயிரம் டாலர்கள் மட்டுமே வசூல் செய்ய வில்லியம்ஸ் முடிவு செய்தார். ஆனால் அவருக்கு  4.75 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 3.40 கோடி ரூபாய்) குவிந்துள்ளது. 

மேலும் சில இடங்களில் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் பணம் கிடைத்துள்ளது. இந்தப் பணம் குவாடன் மற்றும் அவரது தாயை டிஸ்னிலேண்டை சுற்றி பார்க்குமாறு வழங்கப்பட்டது. ஆனால் குவாடன் மற்றும் அவனது குடும்பத்தார், தாங்கள் டிஸ்னிலேண்ட்டை சுற்றிப் பார்ப்பதைவிட, இந்த பணம் மொத்தத்தையும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக செயல்படும் தொண்டு நிறுவனத்துக்கு அனுப்புமாறு கூறியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

QUADEN BAYLES, DISNEYLAND