பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பல்.. பயணத்தை தொடங்கிய கொஞ்ச நேரத்துல அதிகாரிகளுக்கு போன அதிர்ச்சி தகவல்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பல் அமெரிக்கா நோக்கி பயணத்தை துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே பழுதடைந்திருக்கிறது.

பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பல்.. பயணத்தை தொடங்கிய கொஞ்ச நேரத்துல அதிகாரிகளுக்கு போன அதிர்ச்சி தகவல்..

Also Read | இந்தியாவின் யூடியூப் கிராமம்.. தொழிலே வீடியோ மேக்கிங் தானாம்.. இப்படியும் ஒரு ஊரா..?

போர்க்கப்பல்

பிரிட்டிஷ் ராயல் நேவியின் விமானம் தாங்கி போர்க்கப்பலான HMS Prince of Wales அமெரிக்காவில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட இருந்தது. இதற்காக கடந்த சனிக்கிழமை அன்று ஹாம்ப்ஷயரில் உள்ள போர்ட்ஸ்மவுத் கடற்படை தளத்தில் இருந்து கிளம்பியது. ஆனால், விரைவிலேயே கடற்படை அதிகாரிகளுக்கு அவசர அறிவிப்பு ஒன்று வந்திருக்கிறது. அதில், இந்த போர்க்கப்பலில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 6500 டன் எடைகொண்ட இந்த பிரம்மாண்ட போர்க்கப்பலை வரும் நாட்களில் நிபுணர்கள் பார்வையிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

British Navy carrier breaks down after departing for US

கோளாறு

இதுபற்றி பேசிய பிரிட்டிஷ் ராயல் நேவியின் செய்தித் தொடர்பாளர்,"HMS Prince of Wales போர்க்கப்பல் தென்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு குறித்து நிபுணர்கள் ஆராய இருக்கிறார்கள்" என்றார். ஏற்கனவே கடந்த 27 ஆம் தேதி இந்த கப்பல் பயணத்தை துவங்க இருந்தது. இருப்பினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயண தேதி தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கப்பல், சனிக்கிழமை மதியம் புறப்பட்டதை தொடர்ந்து போர்ட்ஸ்மவுத்தில் உள்ள சவுத்சீ காமனில் இசைக்கச்சேரி நடத்தப்பட்டு மக்கள் கோலாகலமாக இந்த கப்பலை வழியனுப்பினர். இந்நிலையில், இதுபற்றி பேசியுள்ள கேப்டன் ரிச்சர்ட் ஹெவிட்," அட்லாண்டிக் கடலில் HMS Prince of Wales போர்க்கப்பல் பயிற்சியை மேற்கொள்வது புதிய அனுபவமாக இருப்பதோடு நட்பு நாடுகளுடன் நெருங்கிய உறவை பிரதிபலிக்கும் விதமாகவும் இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.

British Navy carrier breaks down after departing for US

நம்பிக்கை

வட அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற இருந்த பயிற்சிக்காக இந்த கப்பல் தனது பயணத்தை துவங்கியது. புறப்பட்ட அடுத்தநாளே கப்பலில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கோளாறை விரைவில் சரி செய்யலாம் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்திருகின்றனர். இருப்பினும் கப்பலின் ப்ரொபெல்லர் ஷாஃப்டில் கோளாறு ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்ய கப்பலை வேறு இடத்துக்கு நகர்த்த வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பல் இயந்திர கோளாறு காரணமாக கடலில் நிறுத்தப்பட்டது, ஐரோப்பா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "நகரத்தின் ஆன்மா இந்த இடம் தான்".. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆனந்த் மஹிந்திரா போட்ட பதிவு.. வைரலாகும் வீடியோ..!

BRITISH NAVY CARRIER, BRITISH NAVY CARRIER BREAKS DOWN, US, போர்க்கப்பல்

மற்ற செய்திகள்