'குளிர்காலம் வேற வருது...' 'அவங்களுக்கு' கண்டிப்பா 'பூஸ்டர் வாக்சின்' போட்டாகணும்...! - மூன்றாவது தடுப்பூசி போட தீவிரம் காட்டும் நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸிற்கு எதிராக பிரிட்டனில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரிட்டன் மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்ட 85 சதவீதத்தினர் முதல் தடுப்பூசி பெற்றுள்ளனர். அவர்களில் 62% பேர் இரண்டாம் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
ஆனால் தற்போது புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் நோய் எதிர்ப்பாற்றலை குறையாமல் பராமரிக்க பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பிரிட்டனின் சுகாதார செயலர் சாஜித் ஜாவித், 'முதல் தடுப்பூசி திட்டம் நாட்டில் சுதந்திரத்தை மீட்டு தந்தது. பூஸ்டர் தடுப்பூசி திட்டம் அந்த சுதந்திரத்தை பாதுகாக்கும்' எனக் கூறியுள்ளார்.
மேலும் தடுப்பூசி மற்றும் நோய் தடுப்புக்கான கூட்டுக்குழுவும், குளிர்காலத்திற்கு முன் ஆபத்தானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை போட்டு பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
அதோடு, இங்கிலாந்துக்கான இணை தலைமை மருத்துவ அதிகாரி ஜோனாதன் வேன் டாம் என்பவரும் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி தேவையானது தான் என கூறியுள்ளார்.
குறிப்பாக, குளிர்காலத்தில் சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் ப்ளூ வைரஸ் போன்றவையும் பரவுவது கூடுதல் பிரச்சனையாக இருக்கும். அதனால் ப்ளூ மற்றும் கோவிட்டிற்கு எதிராக பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்