தனது கருமுட்டைகளை வழங்கி... தந்தையே 'அம்மா' ஆனார்!!.. அபூர்வமான தம்பதியின் அதிரடி முடிவு!.. "அடுத்த குழந்தைக்கு பிளான் பண்றோம்"!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில், முதல் பாலின மாற்றம் செய்துகொண்ட தம்பதியர், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

தனது கருமுட்டைகளை வழங்கி... தந்தையே 'அம்மா' ஆனார்!!.. அபூர்வமான தம்பதியின் அதிரடி முடிவு!.. "அடுத்த குழந்தைக்கு பிளான் பண்றோம்"!

இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த ஹன்னாஹ் (32), ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். ஜேக் கிராஃப் (41) பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். இருவரும் திருமணம் செய்துகொண்டபோது, அவர்களுக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

ஜேக் பெண்ணாக இருக்கும்போதே, தனது கரு முட்டைகளை உறையவைத்து சேகரித்து வைத்திருந்தார். அவற்றை பயன்படுத்தி அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள லவுரா  என்ற வாடகைத்தாய் முன்வந்தார்.

britain transgender parents plan having baby via surrogacy

அதன் விளைவாக, ஏப்ரல் மாதம் அவர் மில்லி என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதாவது இப்போது தந்தை ஸ்தானத்தில் இருப்பவரே, தாயாக தனது கருமுட்டைகளை பயன்படுத்தியுள்ளார்.

தம்பதியரின் குழந்தை ஆசை நிறைவேறிய நிலையில், மீண்டும் வாடகைத்தாயாக லவுரா முன்வந்துள்ளார். இதை தொடர்ந்து இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர் இந்த அபூர்வ தம்பதியர்.

britain transgender parents plan having baby via surrogacy

மற்ற செய்திகள்