‘2020 வது வருஷம் இறுதி வரைக்குமா?’.. ‘ஸ்ட்ரிக்டாக’ அறிவித்த பிரிட்டன் அரசு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

2020-ஆம் ஆண்டு இறுதிவரை தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என இங்கிலாந்து மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘2020 வது வருஷம் இறுதி வரைக்குமா?’.. ‘ஸ்ட்ரிக்டாக’ அறிவித்த பிரிட்டன் அரசு!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதுவரை 26 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்தில் மட்டும் 33 ஆயிரத்து 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்துமுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பிரிட்டன் மாளிகையில் அரச பொறுப்புகளில் இருப்பவர்கள் உட்பட பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது உலக மக்களால் பின்பற்றப்பட்டுக்கொண்டுவரும் தனிமனித இடைவெளியை 2020 ஆம் ஆண்டுவரை பின்பற்றுமாறு இங்கிலாந்து மக்களுக்கு, அவ்வரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார்.