அமெரிக்காவின் பயங்கரமான அம்யூஸ்மென்ட் பார்க்.. 50 வருஷமா உள்ள போகவே பயப்படும் மக்கள்.. திகிலூட்டும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் உள்ள அம்யூஸ்மென்ட் பார்க் ஒன்றில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பொதுமக்கள் நுழையவே அச்சப்படுகிறார்கள். அதற்கு காரணம் அங்கு நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் தான் என சொல்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
Also Read | ட்விட்டர் ஊழியர்களுக்கு வந்த மெயில்.. அடுத்த வாரம் எலான் மஸ்க் செய்ய இருக்கும் சம்பவம்?.. முழு விபரம்.!
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் அமைந்துள்ளது லேக் ஷாவ்னீ (Lake Shawnee) அம்யூஸ்மென்ட் பார்க். 1962 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது சில வருடங்களிலேயே மூடப்பட்டிருக்கிறது. இந்த இடத்தை வாங்கியிருந்த கட்டுமான நிறுவனம், இப்பூங்கா அமைந்திருக்கும் இடத்தில் பூர்வீக அமெரிக்க கலைப்பொருட்கள் இருப்பதை அறிந்து தனது திட்டத்தையும் கைவிட்டிருக்கிறது. அதனால் பராமரிப்பு இல்லாமல் இந்த அம்யூஸ்மென்ட் பார்க் அப்படியே விடப்பட்டிருக்கிறது.
மர்ம சத்தங்கள்
இந்த பார்க்கில் இரவு நேரத்தில் குழந்தைகள் அழும் சத்தம் கேட்பதாகவும், இங்குள்ள பாழடைந்த ஊஞ்சல்கள் தாமாகவே ஆடுவதாகவும் கூறுகிறார்கள் உள்ளூர் பிராந்திய மக்கள். இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்படும் சம்பவம் தான் பலரையும் திகைக்க வைக்கிறது. 1700-களில் இந்த பகுதிக்கு ஒரு குடும்பம் குடிபெயந்திருக்கிறது. அதன்பின்னர் இப்பகுதியை தோட்டம் அமைக்க அந்த குடும்பத்தினர் பயன்படுத்தியுள்ளனர். பின்னர் பல வருடங்களாக அந்த குடும்பம் வேளாண்மையில் ஈடுபட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் 1783 ஆம் ஆண்டு பூர்வீக அமெரிக்க பழங்குடிகள் இந்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
2 சம்பவங்கள்
அதன்பிறகு பல வருடங்கள் கழித்து இங்கே அம்யூஸ்மென்ட் பார்க் அமைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பயன்பாட்டிற்கு பார்க் வந்தபிறகு இங்கே அமைந்திருக்கும் ஏரியில் மூழ்கி ஒரு குழந்தை இறந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து மேலும் ஒரு குழந்தையும் இந்த பார்க்கில் மரணமடையவே பொதுமக்கள் மத்தியில் இந்த பார்க் பற்றிய பயம் ஏற்பட்டுவிட்டது. இறுதியாக 1966 ஆம் ஆண்டு இந்த பார்க்கை மூடுவதாக நிர்வாக அறிவித்தது. அதன்பிறகு இங்கே யாரும் செல்வதில்லை. இருப்பினும், ஊஞ்சல்கள், ராட்டினம் ஆகியவை செடிகளுக்கு மத்தியில் அப்படியே இருக்கின்றன.
கிட்டத்தட்ட 50 வருடங்கள் ஆன பிறகும், இந்த அம்யூஸ்மென்ட் பார்க் பற்றிய பயம் உள்ளூர் மக்களிடையே போகவில்லை. அதன் காரணமாகவே இன்னும் இந்த பூங்காவிற்குள் யாரும் நுழையவே அச்சம் கொள்கின்றனர். பொதுமக்கள் பலரும் அமெரிக்காவின் மிகவும் பயங்கரமான இடம் இதுதான் என சமூக வலை தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | கனவுல கூட இந்த தீவுக்கு போய்டவே கூடாது.. மனுஷங்களே கிடையாது.. கால் வைக்குற இடமெல்லாம் பாம்புதானாம்..!
மற்ற செய்திகள்