‘என்னது பாலத்தக் காணோமா..!’ 75 அடி பாலம் மாயம்.. திருடியவர்களைத் தேடும் போலீஸ்..
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவின் ஆர்க்டிக் பகுதியில் 56 டன் எடையுள்ள பாலம் ஒன்று காணாமல் போன விநோதமான சம்பவம் நடந்துள்ளது.
ரஷ்யாவின் முர்ம்மன்ஸ் பகுதியில் அம்பா ஆற்றின் மீது 75 அடி நீள பாலம் ஒன்று இருந்துள்ளது. மே மாதம் அந்த பாலம் மர்மமான முறையில் காணாமல் போனதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. பின்னர் பாலத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியதாக புகைப்படங்களும் வெளியாகின.
அதற்கு 10 நாட்களுக்குப் பிறகு அந்த இடத்தில் பாலம் இருந்ததற்கான தடயங்களே இல்லாமல் இருந்துள்ளது. இடிந்து விழுந்த பாலத்தின் பாகங்கள் நீரிலும் இல்லை. பாலம் கீழே விழுந்ததும் திருடர்கள் தூக்கிச் சென்றிருக்கலாம் என உள்ளூர் வாசிகள் யூகிக்கிறார்கள். இது பற்றி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தானாக பாலம் கீழே இறங்குவதற்கு வாய்ப்புகளே இல்லை எனக் கூறப்படுகிறது. சுமார் 56 டன் எடை கொண்ட பாலம் காணாமல் போனது எப்படி என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.