விசேஷத்தில் ஒரே டேபிளில் அமர்ந்த ஆண்கள் .. அத்தனை பேரும் கல்யாண பொண்ணோட Ex Boyfriend ஆ? வேறலெவல் சம்பவம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்சமூக வலைத்தளங்களில் நாம் நேரத்தை உலவிடும் போது நம்மை சுற்றி நடைபெறும் ஏராளமான விஷயங்களை குறித்து தெரிந்து கொள்ள முடியும்.
Images are subject to © copyright to their respective owners
அது மட்டுமில்லாமல், தினந்தோறும் வைரலாகும் செய்திகள் மற்றும் வீடியோக்களை கூட நாம் நிறைய கடந்து வருவோம்.
இப்படி வைரலாகும் வீடியோ என்பது வழக்கமாக நடைபெறும் விஷயத்தில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கும் வகையில் அமைந்திருக்கும். அப்படி இருக்கையில் தான், அந்த வீடியோ அல்லது செய்திகள் கூட சோஷியல் மீடியாவில் இணையவாசிகள் கவனம் பெற்று வைரல் ஆகவும் செய்யும். அந்த வகையில் ஒரு சம்பவம் குறித்த செய்தி தான் தற்போது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
பொதுவாக ஒருவரது திருமணம் வரும் சமயத்தில், அவர் தனது நண்பர்கள் வட்டாரத்தில் உள்ள அனைவரையும் அழைத்து திருமணத்தை விழா போல மாற்ற வேண்டுமென்றும் விரும்புவார்கள். இந்த நிலையில், சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தின் போது மிகவும் வித்தியாசமான விஷயம் ஒன்றை செய்துள்ளார்.
அதாவது, அவரின் திருமண நிகழ்வின் போது அங்கே மேசை ஒன்றில் "முன்னாள் காதலர்களுக்கான மேசை" என குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. மேலும் இந்த மேசையில் நான்கைந்து ஆண்கள் வரை அமர்ந்திருந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், அவர்கள் அனைவருமே அந்த மணப்பெண்ணை ஒவ்வொரு காலகட்டத்தில் காதலித்து வந்தவர்கள் என்றும் தெரிகிறது.
இது தொடர்பான நிகழ்வு தற்போது அதிகம் வைரலாகி வரும் நிலையில், முன்னாள் காதலியின் திருமணத்திற்கு அவர்கள் அனைவருமே வருகை தந்தது சிறந்த விஷயம் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்