'கல்யாண குஷியில் அளவுக்கு மீறி போன மது'... 'மூச்சு இரைக்க போட்ட ஆட்டம்'... திருமண வரவேற்பில் காத்திருந்த பேரதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

திருமணம் என்றாலே அதில் இருக்கும் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரிக்க முடியாது. ஆனால் அளவுக்கு மீறிய கொண்டாட்டத்தால் நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு.

'கல்யாண குஷியில் அளவுக்கு மீறி போன மது'... 'மூச்சு இரைக்க போட்ட ஆட்டம்'... திருமண வரவேற்பில் காத்திருந்த பேரதிர்ச்சி!

இங்கிலாந்து நாட்டின் செஸ்டர் என்ற பகுதியைச் சேர்ந்த கிம் லேரிக்கும், லேன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றதது. இதையடுத்து இவருவரும் தங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடந்த திட்டமிட்டார்கள். அதன்படி இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது. விருந்தினர்கள் பலர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது மணமகள் கிம் லேரியின் தந்தை ஜான் நடனமாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென சரிந்து கீழே விழுந்தார்.

Bride saves dad’s life when he collapses at her wedding reception

இதைச் சற்றும் எதிர்பாராத உறவினர்கள் அதிர்ந்து போனார்கள். திருமண வீடு ஒரு நிமிடம் அப்படியே அமைதியால் நிசப்தமானது. உடனே மேடையிலிருந்து ஓடிவந்த கிம், தனது தந்தைக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சையினை செய்தார். பின்னர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு மணமகனும், மணமகளும் மருத்துவமனையிலேயே தங்களது இரவை கழித்துள்ளார்கள். தங்களின் திருமண உடையிலேயே இருவரும் மருத்துவமனையில் இருந்துள்ளார்கள்.

இதற்கிடையே மணமகள் கிம் லேரியின் தந்தை ஜானுக்கு ஏற்கனவே இருதய பிரச்சனை இருந்துள்ளது. ஆனால் மகளுக்கு நீண்ட நாட்களாகவே திருமணம் நடைபெறாமலே இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மகளுக்குத் திருமணம் நடைபெற்ற நிலையில், ஜான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அளவுக்கு மீறி மது குடித்துள்ளார். அதோடு உற்சாக மிகுதியில் பயங்கரமாக நடனம் ஆடியுள்ளார். இதனால் அவரது ரத்தக் கொதிப்பு எக்கச்சக்கமாக அதிகரித்தது. இதனால் நிலைகுலைந்த ஜான் கீழே சரித்துள்ளார்.

Bride saves dad’s life when he collapses at her wedding reception

இந்நிலையில் ஜானுக்கு பயங்கரமான இருதய பிரச்சனை இருப்பதாகவே மருத்துவர்கள் முதலில் எண்ணியுள்ளார்கள். ஆனால் அவர் தனது வாழ்க்கையை முறையை மாற்றினாலே இருதய பாதிப்பு என்பது சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறிய பின்பு தான் மணமகள் கிம் லேரியும்  மற்றும் மணமகன் லேனும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். இதனிடையே மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டு வந்த ஜானுக்கு, முதலில் உயிர் காக்கும் சிகிச்சை கொடுத்துக் காப்பாற்றிய அவரது மகள் கிம் ஒரு செவிலியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்