RRR Others USA

ஒரே நேரத்துல 9 மனைவிகளுடன் வசித்த ரெமோ.. திடீர்னு அந்நியனா மாறிய ஒரு மனைவி..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒரே நேரத்தில் 9 மனைவிகளுடன் வசித்து வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் ஒருவர் தற்போது தன்னுடைய மனைவி ஒருவரை விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்.

ஒரே நேரத்துல 9 மனைவிகளுடன் வசித்த ரெமோ.. திடீர்னு அந்நியனா மாறிய ஒரு மனைவி..

மனிதர்கள் வாழ முடியாத நாடாக மாறும் குவைத்? அதிர்ச்சி அளித்த ஆய்வாளர்கள்..!

மாடல்

பிரேசில் நாட்டில் வசித்து வருபவர் அர்தூர் உஸ்ரோ. நடிகர் மற்றும் மாடலான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரேசில் தலைநகர் சாவோ போலாவில் தன்னுடைய 9 காதலிகளை மணந்துகொண்டார். அந்நாட்டை பொறுத்தவரையில் ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ள கூடாது. அப்படி சட்டமே இருக்கிறதாம். ஆனால் அதற்கு எதிர் கருத்து கொண்ட அர்தூர் சட்டப்படி லுவானா கஜ்கி என்ற பெண்ணை மட்டும் தான் திருமணம் செய்துள்ளார். ஆனால், மீதியுள்ள 8 பேருடனும் ஒன்றாக வசித்து வந்தார் இந்த பலே மாடல்.

Brazilian Model Faces Divorce From 1 Of His 9 Wives

ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் காதலுடன் வாழ்வதே தனது லட்சியம் என்கிறார் இவர். இதன் காரணமாகவே இப்படி ஒரு முடிவை எடுத்ததாகவும் கூறுகிறார்.

கடுப்பான மனைவி

இந்நிலையில் இவருடைய மனைவி ஒருவரை தற்போது விவாகரத்து செய்ய இருப்பதாக அர்தூர் அறிவித்திருக்கிறார். தன்னுடைய மனைவி ஒருவர் தன்னை முழுவதுமாக சொந்தம் கொண்டாட நினைப்பதாகவும் அது தன்னுடைய கொள்கைக்கு விரோதமாக இருப்பதால் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் அர்தூர் தெரிவித்திருக்கிறார்.

Brazilian Model Faces Divorce From 1 Of His 9 Wives

அகதா

தன்னுடைய மனைவிகளில் ஒருவரான அகதாவை தான் அதூர் விவாகரத்து செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"மற்ற மனைவிகளுடன் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதே என் கனவு என்பதை சொல்லி அதற்கு அவர் சம்மதித்த பிறகு தான் திருமணம் செய்தேன். ஆனால் அவர் அப்படி நடந்து கொள்ளவில்லை. என்னை முழுவதுமாக உரிமை கொண்டாட நினைக்கிறார். மற்ற 8 மனைவிகளுக்கும் அகதாவின் நடவடிக்கை பிடிக்கவில்லை" என்றார்.

10 மனைவிகள்

தற்போது ஒரு குழந்தை மட்டுமே தனக்கு இருப்பதாகவும் அனைத்து மனைவிகளுடனும் குழந்தை பெற்றுக்கொள்வதே தனது விருப்பம் என தெரிவிக்கும் அர்தூர்," என்னுடைய அனைத்து மனைவிகளையும் ஒரே போல காதலிக்கிறேன். இப்போது ஒருவரை இழப்பது வருத்தமாக இருந்தாலும் அவரிடத்தில் வேறு ஒருவர் வருவதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும் 10 மனைவிகள் என்னும் எனது கனவினை எதிர்காலத்தில் நிறைவேற்றுவேன்" எனக் கூறியுள்ளார்.

Brazilian Model Faces Divorce From 1 Of His 9 Wives

இணைய தளங்களில் பிரபலமான அர்தூர் தனது 9 மனைவிகளில் ஒருவரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அப்பாடா... கூகுள் Map ல வரவிருக்கும் புது ஆப்ஷன்.. இனி டிராவல் இன்னும் ஈஸியா இருக்கும்..

BRAZIL, BRAZILIAN MODEL, DIVORCE, MAN, MARRIAGE, WIVES

மற்ற செய்திகள்