‘நீங்களே இப்படி பண்ணா எப்படிங்க..!’ அதிபருக்கே அபராதம்.. பிரேசில் அரசு அதிரடி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா விதிகளை மீறியதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாவுக்கு அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது.

‘நீங்களே இப்படி பண்ணா எப்படிங்க..!’ அதிபருக்கே அபராதம்.. பிரேசில் அரசு அதிரடி..!

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு இதுவரை 1 கோடியே 74 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 லட்சத்து 87 ஆயிரம் பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதற்கு அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் (Jair Bolsonaro) அலட்சியமான நடவடிக்கையே காரணம் என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Brazil president Jair Bolsonaro fined for not wearing mask

ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரஸை சாதாரண காய்ச்சலுடன் ஒப்பிட்டுப் பேசி வரும் ஜெய்ர் போல்சனாரோ, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை அவசியமற்றவை என்றும் கூறி வருகிறார். இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்களை அவர் எதிர்கொண்டு வருகிறார்.

Brazil president Jair Bolsonaro fined for not wearing mask

இந்த நிலையில் சா பவுலா (Sao Paulo) மாகாணத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றார். அப்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற எந்த விதிகளையும் அவர் பின்பற்றவில்லை.

Brazil president Jair Bolsonaro fined for not wearing mask

இதனை அடுத்து சா பவுலா மாகாணத்தின் நிர்வாகம், நாட்டின் அதிபரே இப்படி செய்யலாமா எனக் கூறி, கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் அதிக அளவில் மக்களைத் திரட்டி பேரணியில் ஈடுபட்டதற்காக, அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு 100 அமெரிக்க டாலர் ‌(இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,300) அபராதம் விதித்துள்ளது.

மற்ற செய்திகள்