நீங்க ஒரு 'நாட்டோட' அதிபரா இருக்கலாம்...! 'ஆனா அதுக்காக உங்கள ஹோட்டல் உள்ள விட முடியாது...' - கடைசியில 'எங்க' சாப்பிட்டார் தெரியுமா...?
முகப்பு > செய்திகள் > உலகம்பிரேசில் (Brazil) நாட்டு அதிபருக்கு அமெரிக்க ஓட்டலில் நடந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
![நீங்க ஒரு 'நாட்டோட' அதிபரா இருக்கலாம்...! 'ஆனா அதுக்காக உங்கள ஹோட்டல் உள்ள விட முடியாது...' - கடைசியில 'எங்க' சாப்பிட்டார் தெரியுமா...? நீங்க ஒரு 'நாட்டோட' அதிபரா இருக்கலாம்...! 'ஆனா அதுக்காக உங்கள ஹோட்டல் உள்ள விட முடியாது...' - கடைசியில 'எங்க' சாப்பிட்டார் தெரியுமா...?](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/brazil-president-eats-pizza-on-the-street-after-us-hotel-denies-entry-thum.jpg)
அமெரிக்காவின் (America) நியூயார்க் நகரில், 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடைபெற இருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சில உறுப்பு நாடுகளின் தலைவர்கள் காணொலி மூலம் பங்கேற்று வருகின்றனர். கொரோனா தடுப்பூசி போடாவிட்டாலும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கேற்க எந்த தடையும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்து கொள்வதற்காக நாளை அமெரிக்கா செல்கிறார்.
இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் (20-09-2021) பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) நியூயார்க் நகருக்கு வந்துள்ளார். அப்போது நியூயார்க் நகரில் உள்ள உணவகங்களில் சாப்பிட தன் அமைச்சரவை சகாக்களுடன் இரவு உணவு சாப்பிட சென்றுள்ளார்.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, கொரோனா தடுப்பூசி போடாத காரணத்தால் பிரபல உணவகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுதுள்ளது. அதன்பிறகு, பிரேசில் அதிபர் தனது அமைச்சரவை உறுப்பினர்களோடு நடைபாதையில் இருந்த கடை ஒன்றில் இரவு உணவாக பீட்சா சாப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்தான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சம்பவம் குறித்து கூறிய நியூயார்க் நகர மேயர் பிளேசியோ, 'பிரேசில் அதிபர் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' எனவும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்