'என்னடா பா வயசு உனக்கு'... 'கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த சுழல்'... 'அப்பா, தங்கச்சியை காப்பாற்ற சூப்பர்மேனாக மாறிய சிறுவன்'... அசர வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சாகசங்கள் செய்ய வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து, நிஜ சூப்பர்மேனாக மாறியுள்ளார் சிறுவன் ஒருவன்.

'என்னடா பா வயசு உனக்கு'... 'கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த சுழல்'... 'அப்பா, தங்கச்சியை காப்பாற்ற சூப்பர்மேனாக மாறிய சிறுவன்'... அசர வைக்கும் சம்பவம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஸ்டீவன் பவுஸ்ட்.  இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஓய்வு நேரங்களில் அவர்களோடு இணைந்து பொழுதைக் கழிப்பதற்காக மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். அந்தவகையில் தமது 7 வயது மகன் சேஸ் மற்றும் 4 வயது மகள் அபிகாயிலுடன் அங்குள்ள செயின்ட் ஜான்ஸ் நதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

Brave young boy swam the shore to get for his family

குழந்தைகளோடு ஜாலியாக படகில் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென நதியில் ஏற்பட்ட சுழல் மற்றும் அதிகரித்த தண்ணீரின் வேகத்தால், படகு நிலைகுலைந்த நிலையில் சிறுமி அபிகால் அடித்துச் செல்லப்பட்டார். மகளைத் தனது கண்ணனுக்கு முன்னால் தண்ணீர் அடித்துச் செல்வதைப் பார்த்த ஸ்டீவன், பதறிப் போய் படகிலிருந்து குதித்து மகளைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.

Brave young boy swam the shore to get for his family

அதே நேரத்தில் சாமர்த்தியமாக யோசித்த சிறுவன் சேஸ், படகிலிருந்து குதித்து கரையை நோக்கி நீந்திச் சென்றுள்ளார். கரையை அடைந்ததும் அருகிலிருந்த குடியிருப்புக்குள் ஓடிய சிறுவன், அங்கிருந்தவர்களிடம் நடந்ததைச் சொல்லி உதவி கேட்டுள்ளார். உடனே அந்த குடியிருப்பு வாசிகள் ஜாக்சன்வில்லி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

Brave young boy swam the shore to get for his family

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், நதியில் தத்தளித்த தந்தை மற்றும் மகளை மீட்டனர். சிறுமி மட்டும் பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்திருந்ததால் சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் மிதந்தபடி, உதவிக்காகக் காத்திருந்தார் என வீரர்கள் தெரிவித்தனர். ஆபத்து நேரத்தில் சாமர்த்தியமாகச் செயல்பட்ட 7 வயது சிறுவனுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

மற்ற செய்திகள்