ET Others

1400 கிமீ தூரம்.. தனியாவே நடந்து போன உக்ரைன் சிறுவன்.. பையில் இருந்த லெட்டரை பாத்துட்டு கலங்கிப்போன அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜபோரோஷியே என்ற நகரத்தைச் சேர்ந்த 11 வயது உக்ரேனிய சிறுவன், அதன் மேற்கு அண்டை நாடான ஸ்லோவாக்கியாவிற்கு தனியாகவே நடந்து சென்ற சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது.

1400 கிமீ தூரம்.. தனியாவே நடந்து போன உக்ரைன் சிறுவன்.. பையில் இருந்த லெட்டரை பாத்துட்டு கலங்கிப்போன அதிகாரிகள்..!

கையில் மூட்டை.. எல்லையில் நின்று கதறி அழுத்த உக்ரைன் சிறுவன்.. மனசாட்சியை உலுக்கும் வீடியோ..!

போர்

உக்ரைன் மீது இன்று 14 வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை இலக்காக கொண்டு ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது. இதனால் உக்ரைனிய மக்களில் சுமார் 400 பேர் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சுமார் 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், தனது தாய் தந்தையை விட்டுவிட்டு யார் துணையும் இல்லாமல் 1400 கிலோ மீட்டர் தனியாக நடந்து அண்டை  ஸ்லோவேக்கியாவிற்கு சென்றுள்ளான் 11 வயது சிறுவன் ஒருவன்.

ஹீரோ

இதுகுறித்து உக்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்," சிறுவனுடைய தாய் மற்றும் தந்தை உக்ரைனில் தங்க வேண்டி இருந்ததால் அவன் மட்டும் 1400 கிலோ மீட்டர் என்னும் நெடிய பயணத்தை துவங்கி இருக்கிறான். இப்போது அவன் பத்திரமாக இருக்கிறான். அவனுடைய  கபடமற்ற புன்னகை, ஹீரோ போன்ற மன உறுதி ஆகியவற்றின் பலனாக இந்த தூரத்தை அவன் கடந்துள்ளான்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Boy travels 1400 km to Ukrainian border holding his mother letter

கடிதம்

சிறுவனை தனியாக நடந்து சென்று எப்படியாவது ஸ்லோவாக்கியாவை அடையும் படி வலியுறுத்திய அவனது பெற்றோர், அவனது விபரங்கள், பாஸ்போர்ட் மற்றும் அவனை அழைத்துச் செல்ல வரும் உறவினர்களின் முகவரி ஆகியவற்றை ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். தங்களது மகனை உரிய இடத்தில் சேர்க்கும்படி அந்த பெற்றோர் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாகத் தெரிகிறது. சிறுவனும் தனது தாய் கொடுத்த கடிதத்தை கையில் பிடித்தபடியே 1400 கிலோ மீட்டர் பயணித்திருக்கிறான்.

இந்நிலையில், ஸ்லோவாக்கியா நாடும் சிறுவன் பத்திரமாக வந்து சேர்ந்ததாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்லோவாக்கியா அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்," பிளாஸ்டிக் பை, பாஸ்போர்ட், கடிதம், போன் நம்பர் எழுதி வைத்துக்கொண்டு சிறுவன் ஒருவன் ஸ்லோவாக்கியா வந்து சேர்ந்தான். அவனிடம் இருந்த எண் மற்றும் அவனது தாய் அனுப்பிய கடிதத்தின் வாயிலாக சிறுவனை அழைத்துச் செல்ல வைத்திருந்த உறவினர்களை கண்டுபிடிக்க முடிந்தது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சம் இல்லாமல் சுமார் 1400 கிலோ மீட்டர் பயணித்து உக்ரைனில் இருந்து தப்பித்த சிறுவன் குறித்து உலக அளவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

வாக்கிங் போன மனைவிய காணோம்.. புகார் கொடுத்த கணவன்.. புதருக்குள்ள இருந்து கேட்ட செல்போன் சத்தம்..மாஸ்டர் பிளானை கண்டுபிடித்த போலீஸ்..!

BOY TRAVELS, UKRAINIAN BORDER, MOTHER LETTER, சிறுவன், கடிதம்

மற்ற செய்திகள்