பீச்-ல சிப்பி எடுக்க போன சிறுவனுக்கு அடிச்ச Luck.. பூமியில் வாழ்ந்ததுலயே பவர்ஃபுல் உயிரினமா..? உறைந்த ஆராய்ச்சியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தின் கடற்கரை ஒன்றில் சிப்பிகளை சேகரிக்கச் சென்ற ஆறு வயது சிறுவனுக்கு அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது.

பீச்-ல சிப்பி எடுக்க போன சிறுவனுக்கு அடிச்ச Luck.. பூமியில் வாழ்ந்ததுலயே பவர்ஃபுல் உயிரினமா..? உறைந்த ஆராய்ச்சியாளர்கள்..!

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பீட்டர் ஷெல்டன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அங்குள்ள  Bawdsey கடற்கரைக்கு தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார். வழக்கமாக தனது ஆறு வயதான மகன் சாமி ஷெல்டன் உடன் இணைந்து சிப்பிகளை சேகரிப்பார் பீட்டர். அன்றைய தினம் கடற்கரையில் வித்தியாசமாக ஒரு பொருள் கிடப்பதை பார்த்து இருக்கிறார் சாமி ஷெல்டன். உடனடியாக அதன் அருகே சென்ற சாமி ஷெல்டன், அதை கையில் எடுத்து பார்த்தபோது அவருக்கு நம்பமுடியாத அளவுக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கிறது. காரணம் அது பூமியில் முன்னொரு காலத்தில் வாழ்ந்த மெகாலோடன் எனப்படும் பிரம்மாண்ட சுறா மீனின் பல் ஆகும்.

Boy searching for shells on beach discovers megalodon shark tooth

இதுகுறித்துப் பேசிய சாமி ஷெல்டனின் தந்தை பீட்டர்,"உண்மையில் நாங்கள் கடற்கரையில் அழகிய சிப்பிகளைத் தேடிக்கொண்டிருந்தோம். ஆனால் அதற்கு பதிலாக இந்த மெகாலோடனின் பல் கிடைத்தது. அது மிகப்பெரியது மற்றும் மிகவும் கனமானது. அது என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால், கடற்கரைக்கு வந்தவர்கள் அதை அதிசயத்துடன் பார்த்த பிறகுதான் நான் அதனை உறுதிசெய்தேன்" என்றார்.

மெகாலோடன்

இங்கிலாந்து கடற்பகுதியில் காணப்படும் கிரேட் வெள்ளை சுறாக்களை விட மெகாலோடன் 3 மடங்கு பெரிதானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 46 முதல் 67 அடி வரையில் நீளம் கொண்ட இந்த ராட்சத சுறாக்கள் 26 - 3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியில் வாழ்ந்திருக்கின்றன. இவற்றின் பிரம்மாண்ட பற்கள் காரணமாகவே இவற்றிற்கு மெகாலோடன் என்னும் பெயரும் வந்திருக்கிறது. நன்கு வளர்ந்த ஒரு மெகாலோடன் 103 டன் வரையில் எடை கொண்டதாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Boy searching for shells on beach discovers megalodon shark tooth

மிகவும் வலிமையான தாடையை கொண்டிருந்த இந்த வகை சுறாக்கள் பூமியில் வாழ்ந்ததிலேயே மிகவும் ஆக்ரோஷமாக வேட்டையாடக்கூடிய உயிரிங்களுள் ஒன்று எனவும் தெரிவிக்கிறார்கள் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள்.

பெருமை

சிறுவன் ஷாமி ஷெல்டன் தான் கண்டுபிடித்த அபூர்வ சுறாமீனின் பல்லை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் காட்டி மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தூங்கும்போதும் 4 அங்குலம் நீளம் கொண்ட அந்த பல்லை கையில் பிடித்திருப்பதாகவும் அவனது தந்தை பீட்டர் கூறுகிறார். இதுபற்றி அவர் பேசுகையில்," இது ஒரு மனிதனின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நடக்கும் அதிசயம். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்" என்றார்.

Boy searching for shells on beach discovers megalodon shark tooth

கடற்கரையில் சிப்பி பொறுக்கச் சென்ற சிறுவனுக்கு அபூர்வ மெகாலோடனின் பல் கிடைத்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

BEACH, MEGALODAN, SHARK, TOOTH, இங்கிலாந்து, மெகாலோடன், பல்

மற்ற செய்திகள்