இறப்புக்கு முன்னாடி இங்கிலாந்து ராணி எழுதிய கடிதம்.. அதுவும் 5 வயசு சிறுவனுக்கு.. பிரிச்சு பாத்துட்டு ஒருநிமிஷம் எல்லாரும் கலங்கி போய்ட்டாங்க..!
முகப்பு > செய்திகள் > உலகம்மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறப்புக்கு முன்னர் 5 வயது சிறுவனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
இரண்டாம் எலிசபெத்
பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், நேற்று அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ராணியின் உடல் ஒருவாரம் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை ராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் அபேவிற்கு ராஜ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே உலக தலைவர்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டுசெல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடிதம்
பிரிட்டனின் ராணியாக இரண்டாம் எலிசபெத் தேர்ந்தெடுக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் ராணிக்கு கடிதம் எழுதிவந்தனர். இந்த வாழ்த்து கடிதங்களுக்கு ராணியும் பதில் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அப்படி, பிர்ட்லி பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் மெக்கனெல் எனும் 5 வயது சிறுவன் ராணிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறான். அதில்,"அன்புள்ள ராணி 70வது பிளாட்டினம் ஜூபிலி வாழ்த்துக்கள். நன்றி. ஜேம்ஸ்" எனக் குறிப்பிட்டிருக்கிறான்.
பதில் கடிதம்
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி அதாவது ராணி இறந்ததற்கு அடுத்த நாள் ஜேம்ஸிற்கு கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதுவும் ராணியிடம் இருந்து. இதனை கண்ட சிறுவனின் தந்தை கிரேம் மெக்கானெல் திகைத்துப் போயிருக்கிறார். படபடப்புடன் அந்த கடிதத்தை அவர் பிரித்திருக்கிறார். அதில்,"ராணியாக 70 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு நீங்கள் அனுப்பிய அன்பான செய்திக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி சிறுவனின் தந்தை பேசுகையில்,"அன்று நான் வெளியே செல்ல கிளம்பிக்கொண்டிருந்தேன். அப்போது தான் இந்த கடிதம் எங்களுக்கு கிடைத்தது. அதை படித்தவுடன் நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். என் மகனுக்கு ராணியை மிகவும் பிடிக்கும். இருப்பினும் அவர் இறந்துவிட்டார் என அவனுக்கு புரிந்திருந்தது. ராணி அனுப்பிய கடைசி கடிதங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். எங்களுக்கு இது பொக்கிஷம் போன்றது" என்றார்.
Also Read | பிரசவ வலியில் துடித்த ஆதரவற்ற பெண்.. ஓடிச்சென்று பிரசவம் பார்த்த பெண் போலீசுக்கு குவியும் பாராட்டுக்கள்..!
மற்ற செய்திகள்