"வேலை பாக்குற நேரத்துல அதுக்கு மட்டும் No.." Boss கொடுத்த எச்சரிக்கை.. "கூடவே ஊழியர்களுக்கு ஒரு சின்ன பரிசு வேற.."
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்புக்கு பின்னான காலகட்டங்களில், உலகின் பல முன்னணி நிறுவனங்கள், பொருளாதார சூழ்நிலை காரணமாக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
அதில் முக்கியமான ஒன்று, தங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி இருந்தது தான்.
நிறுவனத்தின் முடிவால், பல ஊழியர்கள் கடும் அதிர்ச்சிக்குள் ஆகி, என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உறைந்து போயினர்.
உரிமையாளரின் புதிய யுக்தி
இதனையடுத்து, பல இடங்களில் நிலைமை சீராகி வருவதால், மீண்டும் ஊழியர்களை பணி அமர்த்தியும் வருகின்றனர். அந்த வகையில், ஒரு தனியார் நிறுவன உரிமையாளர், தன்னுடைய ஊழியர்கள் பணி செய்யாமல் இருந்து வருவதை அறிந்து கொள்வதற்காக, புதிய யுக்தி ஒன்றை கையில் எடுத்துள்ளார்.
இனிமே சாப்பிடுவீங்க..
ஒரு தனியார் நிறுவனத்தில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் ஒன்றை, அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றது. அந்த அறிக்கையில் உள்ள தகவலின் படி, "எச்சரிக்கை. அனைத்து ஊழியர்களும் வேலை நேரத்தில் சாப்பிடக் கூடாது. அப்படி வேலை நேரத்தில் சாப்பிட கூடிய ஊழியர்களை பிடித்துக் கொடுக்கும் சக ஊழியருக்கு 20 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1500 ரூபாய்) பரிசாக வழங்கப்படும். அப்படி மூன்று முறைக்கு மேல் ஒருவர் மீது புகார் எழுந்தால், அந்த ஊழியர் உடனடியாக நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரத்தை Waste பண்ண முடியாது..
இது தொடர்பான புகைப்படம் ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. இது எங்கே, எந்த நிறுவனத்திற்காக எடுக்கப்பட்டது என்ற விவரம் சரிவர தெரியவில்லை. இருந்தும், இந்த அறிக்கையை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், டீ அல்லது தின்பண்டங்கள் சாப்பிடுவதாக கூறி, வெளியே சென்று நேரத்தை வீணடிக்க முடியாது என சிலர் தெரிவித்துள்ளனர். அதே போல, இந்த உத்தரவு மூலம் உணவருந்தி சிக்கும் ஊழியர்களை வைத்து, மற்ற ஊழியர்கள் சன்மானம் பெற முடியும் என்பதையும் நெட்டிசன்கள் ஜாலியாக குறிப்பிட்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்