தெரு எங்கும் கிடந்த '400' சடலங்கள்..,, அதுல, '85' சதவீதம் பேருக்கு 'கொரோனா'வாம்... ஒண்ணும் புரியாம விழி பிதுங்கி நிற்கும் 'நாடு'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா தொற்று கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், பொலிவியா நாட்டிலும் கொரோனா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிவியாவில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக சுமார் 60ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்த நாட்டில் மேலுமொரு அதிர்ச்சி தகவலாக, அந்த நாட்டின் தெருக்களில் இருந்தும், வீடுகளில் இருந்தும் கடந்த 5 நாட்களில் 400 க்கும் மேற்பட்டோரின் சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர். இவர்களில் 85 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், அதில் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அந்நாட்டு மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த நாட்டின் கோசாம்பா என்னும் நகரத்தில் 191 உடல்களும், லா பாஸ் என்னும் நகரத்தில் 141 உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. இந்த இரண்டு நகரங்களில் தான் கொரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய நகரமான சாந்தா குரூஸ் பகுதியில் இருந்து சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட சடலங்களை மீட்டெடுத்தனர்.
தடயவியல் நிறுவனத்தின் இயக்குனர் அன்ட்ரூஸ் புளோர்ஸ் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், 'ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை மருத்துவமனையின் வெளியில் இருந்து சுமார் 3,000 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் கொரோனாவால் பலியானவர்கள் அல்லது சந்தேகிக்கப்படுபவர்கள்' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்